இலங்கை: சன் டிவி ஒளிபரப்பு நிலையம் மீது தாக்குதல்
கொழும்பு:
இலங்கையின் வவுனியா நகருக்கு அருகே உள்ள சன் டிவியின் ஒளிபரப்பு நிலையம் மீண்டும் தாக்கப்பட்டது.
வவுனியாவுக்கு அருகே ஒரு கிலோமீட்டர் தொலைவில் வைரவன்புளியங்குளம் என்ற இடத்தில் சன் டிவியின் ஒளிபரப்புநிலையம் அமைந்துள்ளது. சன் டிவி நிகழ்ச்சிகளை இந்த நிலையத்தின் மூலம் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அமைப்பு மறுஒளிபரப்பு செய்து வருகிறதுஇந்த நிலையத்தின் மீது கடந்த ஜூன் மாதம் அடையாளம் தெரியாத சிலர் கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த ஒளிபரப்பு நிலையம் தாக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை இரவு 9.15 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதில் யாரும் காயமடையவில்லை என்றுகூறப்பட்டுள்ளது. டால்பின் ரக வேன் ஒன்றில் தாக்குதல் நடத்தியவர்கள் வந்துள்ளனர். அவர்கள் வந்த வேனை ஒளிபரப்புநிலையத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் பார்த்து சந்தேகமடைந்துள்ளார்.
இதுகுறித்து நிலையத்திற்கு உள்ளே இருந்த மற்ற ஊழியர்களுக்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். அடுத்த சில நொடிகளில்,வேனில் இருந்தவர்கள் தங்களிடமிருந்த கையெறி குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். அவர்களிடம் ஏ.கே. 47 ரகதுப்பாக்கிகளும் இருந்ததாக தெரிகிறது.
இச்சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள் இலங்கை போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் அங்கு விரைந்து வந்தனர்.தாக்குதல் நடத்தியவர்கள் என்பது யார் எனத் தெரியவில்லை.அவர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
கடந்த மாதம் இதே நிலையம் தாக்கப்பட்டபோது, தங்களுக்கும், இந்த நிலையத்திற்கும் சற்றும் தொடர்பில்லை என்று சன் டிவிகுழு தலைவர் கலாநிதி மாறன் மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications