ஐ.டி. காரிடார் நெடுகிலும் ரயில் போக்குவரத்து: ஜெ. தகவல்
சென்னை:
தகவல் தொழில்நுட்பத் துறையின் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் பல்வேறு அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள்துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னை தரமணியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச தொழில்நுட்பப் பூங்காவின் முதலாவது பகுதியை முதல்வர் ஜெயலலிதாஇன்று தொடங்கி வைத்தார். சிங்கப்பூரைச் சேர்ந்த அஸண்டாஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழக தொழில் வளர்ச்சிக் கழகம்இந்த தொழில்நுட்பப் பூங்காவை அமைத்துள்ளது.நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், எதிர்காலத் தேவைகளை மனதில் கொண்டு அடிப்படைக் கட்டமைப்புதொடர்பான திட்டங்கள் தீட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்த தொழில்நுட்பப் பூங்கா, தற்போது அமைக்கப்பட்டுவரும் அதி நவீன தகவல் தொழில்நுட்பப் பாதைக்கு (ஐ.டி. காரிடார்) வெகு அருகே அமைந்துள்ளது.
சென்னையின் பே ஏரியா என்று அழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியை, நகருடன்இணைக்க இந்த ஐ.டி. காரிடார் பாதை மிகவும் வசதியாக இருக்கும். இந்தப் பகுதியின் நீண்ட கால போக்குவரத்துத் தேவையைபூர்த்தி செய்யும் விதமாகவும் ஐ.டி. காரிடார் அமைந்துள்ளது.
இதுதவிர ஐ.டி. காரிடார் பகுதியில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக தினசரி 20 மில்லியன் லிட்டர் நீரை வழங்கும் வகையில் புதிய குடிநீர்க் குழாய்கள் பதிக்கும் பணியையும்விரைவில் தமிழக அரசு மேற்கொள்ளவுள்ளது.
ஐ.டி. காரிடார் பகுதியை மேம்படுத்தும் அதே நேரத்தில், வளர்ச்சிப் பணிகளும் ஒரு சேரவே நடந்து வருகிறது. இதுதவிரபக்கிங்காம் கால்வாய் வழியாக ரயில் போக்குவரத்தை விரிவுபடுத்தும் யோசனையும் அரசிடம் உள்ளது. தற்போது ரயில்போக்குவரத்து திருவான்மியூர் வரை மட்டுமே உள்ளது. இதை ஐ.டி. காரிடார் நெடுகிலும் விரிவுபடுத்தும் யோசனை குறித்துரயில்வே துறையுடன் பேசப்படும்.
வீட்டு வசதியைப் பொருத்தவரை, சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தில் 6000 வீடுகளை கட்டும் பணியைசிங்கப்பூரைச் சேர்ந்த சிங்கப்பூர் ரியால்டி நிறுவனம் மேற்கொண்டுள்ளது என்று கூறினார் ஜெயலலிதா.
சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு சாதகமாக அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து தமிழகஅரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்தயாநிதி மாறன் கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்து மாநில அமைச்சர் ஜெயக்குமார் விரிவான பதிலை அளித்திருந்தார்.இந்த நிலையில் தயாநிதி மாறனுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஜெயலலிதா பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications