தமிழக சிவசேனா காங்கிரஸில் இணைகிறது!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சிவசேனா கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் இணைய முடிவு செய்துள்ளது.

தேசிய அளவில் உள்ள சில பெரிய கட்சிகள் தமிழகத்திலும் உள்ளன. ஆனால் பெயரளவில்தான் அந்தக் கட்சிகள் இங்குசெயல்பட்டுக் கொண்டுள்ளன. சிவ சேனா, ராஷ்டிரிய ஜனதாதளம், லோக் ஜன சக்தி, மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்டவைஅவற்றில் சில.

இதில் சிவ சேனா கட்சிக்கு தொண்டர்கள் என்று யாரும் இருப்பதாக தெரியவில்லை. இந்தக் கட்சி தற்போது காங்கிரஸில்இணைந்து விட முடிவு செய்துள்ளது. சென்னையில் நடந்த இக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இதுதொடர்பாக முடிவுசெய்யப்பட்டது.

இதுகுறித்து சிவ சேனா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தென்மறவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், (தேசியஅளவில்)கட்சிக்குள் அதிகாரப்போட்டி வலுத்து விட்டது. இந்த நிலையில் கட்சியை சிறப்பாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே தொடர்ந்து அதிகாரப் போட்டியை சமாளிப்பதை விட பேசாமல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட முடிவுசெய்துள்ளோம்.

சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மும்பையில் வாழும் தென்னிந்தியர்களின் வளர்ச்சி, நலம் குறித்து போதிய அக்கறைகாட்டுவதில்லை. ஆனால் இதற்கு முன்பு இருந்து, தற்போது கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ள நாராயணன் ரானே, தமிழர்களின்நலம் குறித்து அக்கறை காட்டினார், பல உதவிகளையும் செய்துள்ளார்.

எங்களது கட்சியைச் சேர்ந்த குழு விரைவில் மும்பை சென்று ராணேவைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் சேரும் முடிவைத்தெரிவிக்கவுள்ளோம் என்று கூறியுள்ளார் தென்மறவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+