தலைமையில் மாற்றம் வேண்டும்: முன்னாள் பாஜக தலைவர்
சென்னை:
பாஜக தலைமை, கட்சியினரை அனுசரித்துப் போகும் வகையில் இருக்க வேண்டும். இதற்காக தலைமைப் பதவியில் மாற்றம்தேவைப்பட்டால் மாற்றத்தை மேற்கொள்வதில் தவறில்லை என்று முன்னாள் பாஜக தலைவர் பங்காரு லட்சுமணன் கூறியுள்ளார்.
டெஹல்கா நிறுவன செய்தியாளரிடம் கத்தை, கத்தையாக பணம் வாங்கி கையும் களவுமாகப் பிடிபட்டு கட்சித் தலைவர் பதவியை விட்டுஅகற்றப்பட்டவர் பங்காரு லட்சுமணன். அதற்குப் பிறகு அவர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் அமைதியாக உள்ளார்.இந்த நிலையில் சென்னையில் இன்று தொடங்கும் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள பங்காரு லட்சுமணன்செய்தியாளர்களிடம் பேசுகையில் அத்வானியை மாற்ற வேண்டும் என்ற கருத்தை மறைமுகமாக எடுத்து வைத்தார்.
பங்காரு லட்சுமணன் பேசுகையில், முக்கியத் தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை என்ற உணர்வு கட்சியினரிடம் அதிகரித்து வருகிறது.இத்தகைய சூழ்நிலையில் அனைத்துத் தலைவர்களையும், கட்சியினரையும் அரவணைத்து, அனுசரித்து நடந்து கொள்ளும் தலைவர்நமக்குத் தேவைப்படுகிறார். தலைமைப் பதவியில் மாற்றம் வர வேண்டும் என்ற கருத்து வலுத்தால் அதை மேற்கொள்வதில் தவறில்லை.
அதற்காக நான் அத்வானி ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. கட்சியின் ஒற்றுமை, வளர்ச்சி ஆகியவற்றையும் நாம்கருத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறு சொல்கிறேன்.
அத்வானியை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுக்கும் ஒரு கும்பல், அவரது புகழைப் பாடும் கும்பல் அருகிலேயே இருப்பதால்தான்பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட காரணமாக அமைகிறது என்றார் பங்காரு லட்சுமணன்.
முன்னதாக முன்னாள் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் துணைத் தலைவர் பியாரிலால் கண்டல்வால் ஆகியோருடன் பங்காருலட்சுமணன் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications