பாஜக செயற்குழு கூட்டம் இன்று தொடக்கம்
சென்னை:
பாரதீய ஜனதாக் கட்சியின் 3 நாள் செயற்குழுக் கூட்டம் இன்று தொடங்குகிறது.
பாஜகவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையின் பின்னணியில் சென்னையில் அக்கட்சியின் 3 நாள் செயற்குழுக் கூட்டம் சவேராஹோட்டலில் தொடங்குகிறது. இக்கூட்டத்திற்குக் கட்சித் தலைவர் அத்வானி தலைமை தாங்குகிறார்.முன்னாள் பிரதமர் வாஜ்பாய், 5 மாநில பாஜக முதல்வர்கள், 230 செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்தஆண்டின் தொடக்கத்தில் டெல்லியிலும், அதற்கு முன்பாக மும்பை மற்றும் லக்னோவிலும் செயற்குழுக் கூட்டங்கள் நடந்தன. ஆண்டுக்கு 4முறை செயற்குழுக் கூட்டத்தை பாஜக நடத்தி வருகிறது.
நரேந்திர மோடிக்கு எதிரான அதிருப்தியாளர்கள் போர்க்கொடி, வாஜ்பாய்-அத்வானி இடையிலான பூசல்கள், மதன்லால்குரானாவிவகாரம் ஆகியவற்றின் பின்னணியில் பாஜக செயற்குழு சென்னையில் நடைபெறவுள்ளதால் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும், பல்வேறு மாநில சட்டசபைத் தேர்தல்களை சந்திக்க வேண்டிய நிலையில் அதுதொடர்பாக பாஜக என்ன முடிவு எடுக்கப் போகிறதுஎன்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
சென்னையில் இதற்கு முன்பு 1991ம் ஆண்டு செயற்குழு கூடியது. அப்போது கட்சித் தலைவராக குஷாபாவ் தாக்கரே இருந்தார். பின்னர்1999ம் ஆண்டு நடந்த கூட்டத்தின்போது பிரதமராக வாஜ்பாய் இரு"நதார். அப்போது அத்வானிதான் கட்சித் தலைவர்.
செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாஜக முக்கியத் தலைவர்களான உமாபாரதி, ஓம் பிரகாஷ் மாத்தூர் உள்ளிட்டோர்வியாழக்கிழமை இரவே வந்து விட்டனர். நரேந்திர மோடி உள்ளிட்ட 5 மாநில முதல்வர்கள் இன்று காலை வந்தனர். பாஜக தலைவர்அத்வானி காலை 9.30 மணியளவில் வந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிற்பகலில் வருகிறார்.
செப்டம்பர் 17ம் தேதி தீவுத் திடலில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கங்கை, காவிரி நதிகள் இணைப்பு குறித்து தலைவர்கள்பேசவுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications