தமிழர்களைக் கொச்சைப்படுத்தி விட்டார் விஜயகாந்த்: கிருஷ்ணசாமி
கோவை:
திராவிடம் என்றால் தமிழ் என நமது அரசியல்வாதிகள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்று கூறி தமிழையும், தமிழர்களையும்விஜயகாந்த் கொச்சைப்படுத்தி விட்டார் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வழக்கமாக புதிய கட்சி தொடங்குபவர்கள் நன்றாக சிந்தித்து, தங்களதுகொள்கைகளை அறிவித்து விட்டு அதன் பிறகுதான் கட்சி ஆரம்பிப்பார்கள். ஆனால் பெயர் அறிவிப்பதற்கு 2 நாட்களுக்கு முன்புதான்தனது கட்சியின் பெயரையே முடிவு செய்துள்ளார் விஜயகாந்த்.இதிலிருந்தே விஜயகாந்த்தின் லட்சியத்தின் லட்சணம் தெரிந்து விட்டது. திராவிட இயக்கம் எதற்காக வந்தது என்பதே விஜயகாந்த்துக்குத்தெரியவில்லை. இந்திய நாட்டில் ஒரு சமுதாயம், மற்றொரு சமுதாயத்தை தாழ்வாக நடத்தி விடக் கூடாத என்பதற்காகவும், ஒற்றுமையைநிலை நாட்டவும் வந்ததுதான் தென்னிந்திய நலச் சங்கம். அதிலிருந்து பிறந்ததுதான் திராவிட இயக்கம். ஆனால் இவை ஒன்றுக்கொன்றுமாறுபட்டவை.
இதில் திராவிடம் என்றா தமிழ் என்று அரசியல்வாதிகள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார் விஜயகாந்த். இது தமிழையும்,தமிழர்களையும், தமிழகத்தையும் கொச்சைப்படுத்தும் செயலாகும். இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் விஜயகாந்த்.
விஜயகாந்த் தனது கட்சியை பேசாமல் ஆந்திராவிலோ, கேரளாவிலோ, கர்நாடகத்திலோ ஆரம்பித்திருக்கலாம். ஆனால் இங்கு ஆரம்பித்துதமிழகத்தை இழிவுபடுத்தி விட்டார். இதுவரை தமிழர்களை யாருமே இப்படிக் கொச்சைப்படுத்தியதில்லை என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications