அதிமுக அரசு மீது தயாநிதி மாறன் மீண்டும் தாக்குதல்!
சென்னை:
மத்தியில் திமுக அங்கம் வகிக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருப்பதால்தான் தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்கள்கிடைத்தன என்று மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
சென்னை அருகே நடந்த காரியக் கலப்பில்லாத சர்க்யூட் பிளேட்டிங் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி வைத்து தயாநிதி மாறன்பேசுகையில், மத்தியில் திமுக அங்கம் வகிக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருப்பதால்தான் தமிழகத்திற்கு பல்வேறுதிட்டங்கள் கிடைத்தன.மத்திய அரசு கொடுக்கும் ஊக்கம் காரணமாகவே பல தொழில் நிறுவனங்கள் தமிழகத்திற்கு வந்து கொண்டுள்ளன. இது முழுக்க முழுக்கமத்திய அரசின் சாதனையாகும்.
கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்திற்கு புதிதாக எந்தத் தொழில்நிறுவனமும் வரவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வந்தபிறகுதான் பல நிறுவனங்கள் இங்கு வரத் தொடங்கின. குறிப்பாக நான் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக வந்த பிறகுதான் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் பல சென்னைக்கு இடம் பெயரத் தொடங்கின.
தமிழகத்தில் உலகத் தரம் மிக்க அடிப்படைக்க ட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறுவோர், தமிழகத்திற்கு வெளியேசென்று, குறிப்பாக வெளிநாடுகளுக்குச் சென்று அடிப்படைக் கட்டமைப்பு வசதி என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். அங்கே இருப்பதுதான் உண்மையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள்.
இதற்கு முன்பு இருந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சென்றதே இல்லை. நான் இப்பொறுப்புக்கு வந்தபிறகுதான் வெளிநாடுகளுக்குச் சென்று நமது நாட்டுக்கு அங்கிருந்து பல்வேறு நிறுவனங்களை அழைத்து வந்துள்ளேன்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கைகள் காரணமாக, மேலும் பல தொழில் நிறுவனங்கள் தமிழகத்திற்கு வரவுள்ளன. இந்தப்பெருமை அனைத்தும் திமுக அங்கம் வகிக்கும் மத்திய கூட்டணி ஆட்சிக்கே சேரும் என்றார் தயாநிதி மாறன்.
அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை அதிமுக அரசு மேம்படுத்தாமல் உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு நடந்த விழாவின்போது தயாநிதிமாறன் விமர்சித்திருந்தார். இதற்கு தமிழக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜெயக்குமார், அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார்தயாநிதி மாறன் என்று பதிலடி கொடுத்திருந்தார். பின்னர் ஜெயலலிதா ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், சென்னையில் அடிப்படைக்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் பணிகள் குறித்து விளக்கினார்.
தற்போது மீண்டும் அதிமுக அரசு மீது தயாநிதி மாறன் பாய்ந்திருப்பதன் மூலம் இந்த வார்த்தைப் போர் மேலும் தொடரும் என்ற நிலையைஉருவாக்கியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications