நிருபரை திட்டவில்லை: மு.க.ஸ்டாலின் மறுப்பு
சென்னை:
சென்னை திமுக மகளிர் பேரணியின்போது நக்கீரன் நிருபரை நான் திட்டியதாக கூறப்படுவதில் சற்றும் உண்மையில்லை என்றுஅக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், திமுக மகளிர் பேரணியின் முக்கியத்துவம் குறித்து பல ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளபோதிலும், அதை விட முக்கியத்துவம் கொடுத்த சில ஏடுகளில் நான் நக்கீரன் நிருபரை தரக்குறைவாக பேசியதாக செய்திகள்வெளியாகியுள்ளன. இதற்கு பத்திரிக்கையாளர் சங்கங்கள் சில கண்டனம் தெரிவித்துள்ளன.நான் எப்போதுமே செய்தியாளர்களை மதிப்பவன், தரக்குறைவாக நடத்தியதும் இல்லை, பேசியதும் இல்லை. இதை செய்தியாளர்கள்அறிவார்கள்.
மகளிர் பேரணி என்பதால், அதற்குள் ஆண்கள் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக மற்ற ஏடுகளில் வந்திருப்பதைப் போல, பேரணியைஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். அப்போது அந்த செய்தியாளரும் இருந்திருப்பாரோ என்னவோ.? எனவே வேண்டும் என்றே அந்தச்செய்தியாளரை நான் தரக்குறைவாக பேசிவிடவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்தக் கூட்டத்தினரோடு நக்கீரன் செய்தியாளரும் இருந்திருப்பாரேயானால் அந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.உண்மையில் செய்தியாளர்களுக்கு மரியாதை தர விரும்புகிறவன் நான் என்பதை பத்திரிக்கையாளர் சங்கங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications