தாமரைக்கனி வீட்டில் துக்கம் விசாரித்தார் ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூர்:
மறைந்த ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்.எல்.ஏவும், நகராட்சி தலைவருமான தாமரைக்கனியின் வீட்டிற்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலின் சென்று துக்கம் விசாரித்தார்.வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தாமரைக்கனியின் வீட்டுக்கு ஸ்டாலின் சென்றார். தாமரைக்கனியின்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் துக்கம் விசாரித்துஆறுதல் கூறினார்.
ஸ்டாலினுடன் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மாவட்ட திமுக செயலாளரும், எம்.எல்.ஏவுமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் திமுக பிரமுகர்களும் உடன் சென்றிருந்தனர்.












Click it and Unblock the Notifications