காரில் மோதி ஆடு காயம்! நிதியுதவி வழங்கினார் ஜெ.
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் காரில் மோதி படுகாயம் அடைந்த ஆட்டுக்குட்டிக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டஜெயலலிதா, அடிபட்ட ஆட்டுக் குட்டிக்காக நிதியுதவியையும் வழங்கினார்.
சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்த ஜெயலலிதா தற்போது மாமல்லபுரம் அருகே உள்ள சிறுதாவூர்பங்களாவிலிருந்து தலைமைச் செயலகம் வந்து சென்று கொண்டிருக்கிறார். முன்பு கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக சென்ற அவர்தற்போது பழைய மகாபலிபுரம் சாலை வழியாக வந்து செல்கிறார்.இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சிறுதாவூரிலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக அவர் சென்னைக்கு வந்தார். அப்போதுஉத்தண்டி என்ற இடத்தில் ஆறுமுகம் என்பவரின் ஆட்டுக் குட்டி ஒன்று திடீரென சாலையின் குறுக்கே பாய்ந்தது.
இதைப் பார்த்த முதல்வரின் கார் ஓட்டுநர் வண்டியை வேகமாக நிறுத்தினார். இருப்பினும் ஆட்டுக்குட்டி கார் மீது மோதியதில் படுகாயம்அடைந்தது. இதைப் பார்த்த முதல்வர் வருத்தமடைந்தார். ஆட்டிக்குட்டிக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்குஉத்தரவிட்டார். மேலும், ஆட்டிக்குட்டியின் உரிமையாளருக்கு நிதியுதவியும் அளித்தார்.
முதல்வரின் நிதியுதவியை அதிகாரிகள், ஆட்டுக்குட்டியின் உரிமையாளர் ஆறுமுகத்திடம் (வயது 70) கொடுத்து முதல்வரின்வருத்தத்தையும் தெரிவித்தனர்.
உத்தண்டி செங்கழனியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் ஆறுமுகத்தின் தொழில் ஆடு மேய்ப்பதுதான். மொத்தம் 30 ஆடுகளைஅவர் வைத்துள்ளார். முதல்வரின் கருணை உள்ளத்திற்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications