தமிழக சட்டசபை நாளை கூடுகிறது
சென்னை:
தமிழக சட்டசபையின் மழைக்காலக் கூட்டத் தொடர் புதன்கிழமை கூடுகிறது. ஒரு வாரம் இக்கூட்டத் தொடர் நடைபெறும் எனத்தெரிகிறது.
சட்டசபை கடந்த மார்ச் மாதம் கூடி ஏப்ரல் 13ம் தேதி முடிவடைந்தது. 6 மாதங்களுக்கு ஒரு முறை சபையைக் கூட்ட வேண்டும்என்ற விதிமுறைப்படி தற்போது மழைக்காலக் கூட்டத் தொடர் புதன்கிழமை தொடங்குகிறது.மழைக்காலக் கூட்டத் தொடர் பொதுவாக குறுகிய கால கூட்டத் தொடராகவே இருக்கும். அதன்படி இந்தக் கூட்டத் தொடர் 7 முதல்10 நாட்கள் வரை நடைபெறும் எனத் தெரிகிறது. சேது சமுத்திரத் திட்டத்திற்கு முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்புதெரிவித்து வருகிறார். அதேபோல, மகளிர் சுய உதவிக் குழுக்களை அதிமுக அரசு தவறாகப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள்குற்றம் சாட்டி வருகின்றன.
இதேபோல கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும்இடையே கடுமையான மோதல்கள் இருந்து வருகிறது. இவை அனைத்தும் இந்தக் கூட்டத் தொடரில் சூட்டைக் கிளப்பும் எனத்தெரிகிறது.
முக்கியமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஜெயலலிதா கடும் பிரச்சினையை எழுப்புவார் எனத் தெரிகிறது. மேலும்,சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், இக்கூட்டத் தொடரை தனதுஅரசின் சாதனைகளை விளக்க ஒரு வாய்ப்பாக ஆளுங்கட்சி எடுத்துக் கொள்ளும் எனத் தெரிகிறது.
மொத்தத்தில் அனைத்துக் கட்சிகளும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள், சாதனைப் பட்டியல்களை கையில் வைத்துக் கொண்டு இந்தகூட்டத் தொடரை எதிர்கொள்ளக் காத்துள்ளன. எனவே அணல் பறக்கும் விவாதம், பரஸ்பர குற்றச்சாட்டுக்கள், வெளிநடப்புகள்,கூச்சல் குழப்பங்கள் என இந்த மழைக் காலக் கூட்டத் தொடர் படு விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications