ஜெ.வின் பொடா கோரிக்கை: கருணாநிதி எதிர்ப்பு
சென்னை:
பொடா சட்டத்தை மறுபடியும் கொண்டு வர வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கோரியிருப்பதற்கு திமுக தலைவர் கருணாநிதி எதிர்ப்புதெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: நக்சலைட் பிரச்சினையைத் தீர்க்க பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் நடந்த முதல்வர்கள் மாநாட்டில் கூறியுள்ளார். இதை ஏற்க முடியாது.நக்சலைட் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை ஆகியவையே. அப்பிரச்சினைகளைத் தீர்த்தால்நக்சலைட்டுகள் உருவாவதைத் தடுக்க முடியும். அதை விடுத்து பொடா சட்டத்தின் மூலம் நக்சலைட்டுகளை ஒழிக்க முடியாது.
வேலையில்லாத் திண்டாட்டம், ஏழ்மை ஆகியவற்றை ஒழிக்க தமிழக அரசு உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. இந்தநிலையில் அவற்றை சரி செய்வதை விட்டு விட்டு அரைவேக்காட்டுத்தனமான நடவடிக்கையில் அது இறங்க முற்படுகிறது.
பொடா சட்டத்தை தமிழக அரசு எப்படிப் பயன்படுத்தியது என்பதை அனைவரும் அறிவார்கள். எனவே பொடா சட்டத்தை மீண்டும்கொண்டு வரச் செய்து, அதை அரசியல் ரீதியில் பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்த ஜெயலலிதா திட்டமிடுகிறார்.
எனதருமைச் சகோதரர் வைகோ 19 மாதங்கள் சிறையில் வாடினார். நெடுமாறன் பொடாவுக்கு பலியானவர்களில் ஒருவர். வைகோவும்மற்றவர்களும் நக்சலைட்டுகளா? எதற்காக அவர்கள் மீது பொடா பாய்ந்தது?
சட்டத்தை மீறுவோர் மீது பொடாவைப் பாய்ச்ச வேண்டும் என்று ஜெயலலிதா கூறுவாரேயானால், அளவுக்கு மீறி சொத்துக்களைக்குவித்தவர்கள் மீது என்ன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது என்று கேட்டுள்ளார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications