சிக்கியது ஆதியின் வலது கரம்!
சென்னை:
மோசடி மன்னன் ஆதி கேசவனின் வலது கரம் என்று கூறப்பட்ட மோசடிப் பேர்வழி போலீஸாரிடம் சிக்கியுள்ளார்.
வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் கடன் வாங்கித் தருவதாக கூறி நூற்றுக்கணக்கானோரிடம் கோடிக் கணக்கில் பணத்தைசுருட்டிய வழக்கில் ஆதிகேசவன், அவரது மகன் சாரதி, சில கூட்டாளிகள் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியமானவர்களில் ஒருவர் டொம்னிக். மதுரையைச் சேர்ந்த இவர் சென்னைகுரோம்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார். ஆதி கேசவனின் பல மோசடிகளுக்கு இவர் துணையாக இருந்துள்ளார்.கிட்டத்தட்ட ஆதியின் வலது கரம் போலவே திகழ்ந்தார்.
ஆதி விவகாரம் வெடித்தவுடன் டொம்னிக் தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க போலீஸார் தீவிர முயற்சிகளைமேற்கொண்டிருந்தனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் இவருக்கும், ஆதிக்கும் பழக்கம் ஏற்பட்டது. டொம்னிக் மூலம் பலரைஏமாற்றியுள்ளார் ஆதி.
சென்னையைச் சேர்ந்த டாக்டர் லட்சுமிபதி என்பவரிடம் ரூ. 1 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி அவரிடம் கமிஷனாக ரூ. 8லட்சம் பெற்று அதை ஆதியிடம் கொடுத்துள்ளார் டொம்னிக். அதேபோல செஞ்சியைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர்ஒருவரிடம் ரூ. 1 கோடி கடன் தருவதாக கூறி ரூ. 3 லட்சம் கமிஷன் பெற்றுக் கொடுத்துள்ளார். இதுபோல மேலும் சிலரிடமும்டொம்னிக் பணம் பறித்து ஆதியிடம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
பணத்தைக் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டால், தான் காவல்துறையில் பணியாற்றுவதாகவும், தொல்லை கொடுத்தால் உள்ளேதள்ளி விடுவேன் என்றும் மிரட்டுவாராம் டொம்னிக். அவரது தோற்றமும் போலீலஸ் அதிகாரியைப் போல இருந்ததால், பணம்கொடுத்து ஏமாந்தவர்கள் தங்களது விதியை எண்ணி நொந்து போய்த் திரும்புவார்களாம்.
தற்போது டொம்னிக் சிக்கியுள்ளதால் அவர் மூலம் ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு காவல்துறையில்ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications