இலவச வீடு, ரேஷன் கார்டு: அரவாணிகள் கோரிக்கை!
சென்னை:
அரவாணிகளுக்கு இலவச வீடு, ரேஷன் கார்டு, முதியோர் உதவித் தொகை, இலவச மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி அரவாணிகள் சங்கம் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரவாணிகள் சங்கத் தலைவர் மோகனா தலைமையில் அரவாணிகள் குழு ஒன்று சென்னை தலைமைச் செயலகத்தில்உள்ள முதல்வர் குறை தீர்ப்புப் பிரிவுக்கு வந்தனர். அவர்கள் முதல்வர் தனிச் செயலரிடம் ஒரு கோரிக்கை மனுவைக்கொடுத்தனர்.தங்களது கோரிக்கைகள் குறித்து மோகனா கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள அரவாணிகளுக்கு சமூகப் பாதுகாப்பு மிகவும்குறைவாக உள்ளது. தற்போதுதான் அரவாணிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சில சலுகைகள் கிடைத்து வருகின்றன. ஆனால்இவை போதாது.
மற்றவர்களைப் போலவே நாங்களும் வாழ சில கோரிக்கைகளை தமிழக முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். அரவாணிகளுக்குஇலவச வீடு அல்லது வீட்டு மனை வழங்க வேண்டும். படிப்பு, மருத்துவ வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். குடும்ப அட்டை,ஓட்டுரிமை ஆகியவை வழங்கப்பட வேண்டும்.
அரசு வேலையில் அரவாணிகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். வயது முதிர்ந்த அரவாணிகளுக்கு அரசு உதவித் தொகைவழங்க வேண்டும். அரவாணிகளை துன்புறுத்துவோர் அதிகரித்து வருகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆண்களாக இருந்து பெண்களாக மாற விரும்பும் அரவாணிகளுக்கு அரசு செலவில் இலவச அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடுசெய்ய வேண்டும். பட்டப் படிப்பு முடித்த அரவாணிகளுக்கு அரசு வேலைக்கு உத்தரவாதம் செய்ய வேண்டும்.
பேருந்து, ரயில்களில் சலுகையுடன் கூடிய அனுமதி வேண்டும். சுய தொழில் தொடங்க அரசு தாராளமாக கடன் உதவி செய்யவேண்டும். எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி வைரஸ் பாதிப்புக்குள்ளான அரவாணிகளுக்கு தனிக் காப்பகம் ஏற்படுத்த வேண்டும்.அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
திரைப்படங்களில் அரவாணிகளை மிகவும் கேவலமாக சித்தரிக்கின்றனர். அதற்குத் தடை விதித்து, அவ்வாறு படம்எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எங்களது மனுவில் கோரியுள்ளோம் என்றார் மோகனா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications