தமிழக சட்டசபை கூடியது; 28ம் தேதி வரை நடைபெறும்!
சென்னை:
தமிழக சட்டசபையின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று காலை கூடியது. முன்னாள் சபாநாயகர் முனு ஆதியின் மறைவுக்குஇரங்கல் தெரிவித்த பின்னர் சபை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டசபையின் குறுகிய கால மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்குக் கூடியது. சபை கூடியதும்,சபாநாயகர் காளிமுத்து திருக்குறளுடன் கூட்டத்தை ஆரம்பித்தார்.பின்னர் மறைந்த முன்னாள் சபாநாயகர் முனு ஆதிக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதேபோல தாமரைக்கனிஉள்ளிட்ட மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 13 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானமும் தனியாக தாக்கல்செய்யப்பட்டது.
இதையடுத்து உறுப்பினர்கள் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து சபைக் கூட்டம் இன்று முழுவதும்ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
அதன் பின்னர் சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு சபாநாயகர் அறையில் கூடி கூட்டத் தொடர் குறித்து முடிவு செய்தது. இதன்அடிப்படையில், வருகிற 28ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும். வருகிற 23ம் தேதி நிதியமைச்சர் பொன்னையன் துணைநிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வார். அதன் மீது 26ம் தேதி விவாதம் நடைபெறும். 28ம் தேதி விவாதத்திற்கு பொன்னையன்பதில் அளிப்பார். அத்துடன் கூட்டத் தொடர் நிறைவு பெறும்.
முன்னாள் சபாநாயகர் முனு ஆதி, 1962ம் ஆண்டு முதல் நான்கு முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1977 முதல் 1980வரை அவர் சபாநாயகர் பதவியில் இருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications