Ilangovan Repeats His blame on SRB
சென்னை:
சோனியா காந்தியிடம் என்னைப் பற்றிப் போட்டுக் கொடுப்பதே எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தின் முக்கிய வேலை. அவரால்கட்சிக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்று மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீண்டும்எஸ்.ஆர்.பி. மீது பாய்ந்துள்ளார்.
சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக இருக்கும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தை உடனடியாக மாற்ற வேண்டும். அவரால் கட்சிக்குஒரு பலனும் இல்லை என்று சமீபத்தில் இளங்கோவன் பேசியிருந்தார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் குறிப்பாக வாசன்ஆதரவாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து கண்டிப்பாக எஸ்.ஆர்.பியை மாற்ற வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால் அவரால் சரியாகசெயல்படவில்லை, எனவே மாற்றுவது நல்லது என்றுதான் தெரிவித்தேன் என விளக்கமளித்தார் இளங்கோவன்.
இந்த நிலையில் எஸ்.ஆர்.பி. மீது மீண்டும் கடுமையாக பாய்ந்துள்ளார் இளங்கோவன். அவர் கூறுகையில், எஸ்.ஆர்.பி.சட்டசபையில் உருப்படியாக செயல்படுவதில்லை. மக்கள் நலனுக்காக ஒரு வார்த்தை கூட அவர் சட்டசபையில் பேசியதில்லை.எனவேதான் மாற்றக் கோருகிறேன்.
கட்சிக்கு அவப் பெயர் சம்பாதித்துக் கொடுக்கும் ஒருவர் காங்கிரஸுக்குத் தேவையில்லை. எனவே அவரை மாற்றுவதில் தவறேஇல்லை.
இதை விட முக்கியமானது, எஸ்.ஆர்.பிக்கு முக்கிய வேலையை இங்கிருக்கும் தலைவர்கள் குறித்து சோனியா காந்தியிடம்போட்டுக் கொடுப்பதுதான். குறிப்பாக என்னைப் பற்றி அவ்வப்போது அவர் சோனியா காந்தியிடம் போட்டுக் கொடுக்கிறார்.
சமீபத்தில் கூட சோனியா காந்தியை அவர் டெல்லியில் சந்தித்தபோது, நான் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகபோட்டுக் கொடுத்தார். ஆனால் சோனியா காந்தி உடனடியாக என்னை அழைத்தார். எஸ்.ஆர்.பியை வைத்துக் கொண்டேஎன்னிடம் அவர் கூறிய புகார் குறித்துக் கேட்டார்.
நான் உடனே, எஸ்.ஆர்.பி சொல்வது போல இருந்தால் நான் எனது அமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்கிறேன்.பொய்யாக இருந்தால் அவர் தனது எம்.எல்.ஏ பதவியை விட்டு விலகுவாரா என்று கேட்டேன். அதற்கு எஸ்.ஆர்.பியிடமிருந்துபதிலே இல்லை, அமைதியாக நின்று கொண்டிருந்தார்.
எனவேதான் கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்கும் ஒருவரை சட்டசபை காங்கிரஸ் தலைவராக வைக்க வேண்டாம் என்றுகூறுகிறேன்.
கடந்த 3 வருடங்களாக சட்டசபை காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலை நடத்தவில்லை. இதை உடனடியாக நடத்த வேண்டும் எனவாசனை மீண்டும் வற்புறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் இளங்கோவன்.
எது எதெற்கோ விடிவு பிறக்கிறது, இந்த காங்கிரஸ் கோஷ்டிப் பூசலுக்கு எப்போதுதான் முடிவு வருமோ?












Click it and Unblock the Notifications