இளங்கோவனுக்கு எதிராக திரளும் காங். எம்.எல்.ஏக்கள்
சென்னை:
சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தை பதவி நீக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளதால் கோபமடைந்துள்ள ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் இளங்கோவனுக்கு எதிரான அடுத்த கட்டநடவடிக்கை குறித்து முடிவு செய்ய இன்று சென்னையில் கூடி ஆலோசனை நடத்துகிறார்கள்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சமீப காலமாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் மீதுஅவர் பாய்ந்துள்ளார். இது ஜி.கே.வாசன் ஆதரவாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.எஸ்.ஆர்.பியை விமர்சித்துள்ள இளங்கோவனைக் கண்டித்து பிரச்சினையைக் கிளப்ப அவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். முதல்கட்டமாக சட்டசபை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூடி ஆலோசனை நடத்தவுள்ளனர். இன்று மாலை இக்கூட்டம் நடைபெறுகிறது.
இதில் இளங்கோவனுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கட்சி மேலிடத்திடம்இளங்கோவனைக் கண்டித்துப் புகார் கொடுக்கவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
தனக்கு எதிராக கட்சிக்குள் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், எஸ்.ஆர்.பியை வேண்டும் என்றே தான் விமர்சிக்கவில்லை என்றுஇளங்கோவன் கூறியுள்ளார். இதுகுறித்து குன்னூரில் அவர் கூறுகையில், நான் எஸ்.ஆர்.பியை கட்டாயமாக பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்று சொல்லவில்லை. அவர் இன்னும் ஆக்டிவ் ஆக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவ்வாறுகூறினேன். மற்றபடி அவர் மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்த கோபமும் கிடையாது என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications