தமிழ் பாதுகாப்பு இயக்க போராட்டம்: 1000க்கும் மேற்பட்டோர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்ட, பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் உள்ளிட்டஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும், நீதித்துறையில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட வேண்டும், கோவில்களில்தமிழிலேயே அர்ச்சனை நடைபெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் பாதுகாப்புஇயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் பாமக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டன. சென்னையில் பாமகநிறுவனர் ராமதாஸ், தொல். திருமாவளவன் தலைமையில் 2000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அனைவரையும்போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

கோவையில் 300க்கு மேற்பட்டோரும், மதுரையில் 300க்கு மேற்பட்டோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.தர்மபுரியில் 350 பேர் கைது செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+