வீரப்பன் மகள் எங்களுக்கே சொந்தம்! கிருஷ்ணகிரி தம்பதி வழக்கு
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் இரண்டாவது மகள் பிரபா தங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறி கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஒருதம்பதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
வீரப்பனின் இரண்டாவது மகளான பிரபா கடந்த 1992ம் ஆண்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் பிறந்தாள். குழந்தைகாட்டுக்குள் இருந்தால், அதன் அழுகுரலைக் கேட்டு அதிரடிப்படையினர் தன்னைப் பிடித்து விடுவார்கள் என அஞ்சிய வீரப்பன்,குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைத்து விடும்படி தனது கூட்டாளி செல்வராஜிடம் உத்தரவிட்டான்.இதைத் தொடர்ந்து செல்வராஜ், பிரபாவை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டனத்தைச் சேர்ந்த ராஜரத்தினம்-ரத்னாதம்பதியிடம் சென்று கொடுத்தான். தனக்குத் தெரிந்த ஏழைத் தம்பதியினர் இக்குழந்தையை வளர்க்க முடியாமல் இருப்பதாகவும்,எனவே இக்குழந்தையை தத்தாக கொடுப்பதாகவும் கூறினான்.
ஏற்கனவே பெண் குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்த அந்தத் தம்பதியினர் பிரபாவை தத்து எடுத்துக் கொண்டனர்.அக்குழந்தைக்கு பிரபா என்று அவர்கள் பெயர் வைத்து, நல்லபடியாக வளர்த்து வந்தனர். இந்த நிலையில் பிரபா ஏழாவதுபடித்துக் கொண்டிருந்தபோதுதான் அது வீரப்பனின் குழந்தை என வெளியுலகுக்குத் தெரிய வந்தது.
இருப்பினும் தாங்கள்தான் இதற்கு வளர்ப்புப் பெற்றோர், இதைத் தத்து எடுத்து விட்டோம். எனவே வீரப்பன் மனைவியிடம்இக்குழந்தையை ஒப்படைக்க மாட்டோம் என ராஜரத்தினம்-ரத்னா தம்பதியினர் கூறி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2001ம்ஆண்டு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் உள்ளிட்ட போலீஸ் படையுடன் இவர்களது வீட்டுக்குச் சென்ற வீரப்பனின்மனைவி முத்துலட்சுமி, பிரபாவை தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கிருஷ்ணகிரி தம்பதியினர் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத்தாக்கல் செய்துள்ளனர். அதில், பிரபா, வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட பிறகு அடிக்கடி எங்களுடன்தொலைபேசியில் பேசுவாள். அவளை மீட்க நாங்கள் பலமுறை முயற்சித்தும், வீரப்பனின் நண்பர்கள் எங்களது முயற்சிகளைத்தடுத்து மிரட்டி வந்தனர்.
கடந்த வருடம் அக்டோபர் 18ம் தேதி வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, நாங்கள் பிரபாவைப் பார்த்தோம். அப்போதுஎங்களைப் பார்த்து பிரபா ஓவென அழுதாள். ஆனால் முத்துலட்சுமி, பிரபாவை இழுத்துச் சென்று விட்டார். இதுகுறித்துபோலீஸில் அணுகியபோதும் அவர்கள் புகாரை வாங்க மறுத்து விட்டனர்.
பிரபா எங்களுக்குச் சொந்தமான பெண். அவளை எங்களுடன் நீதிமன்றம்தான் சேர்த்து வைக்க வேண்டும் என்று மனுவில்கூறப்பட்டுள்ளது.
நீதிபதிகள் தினகரன், கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்களின்வழக்கறிஞரான நடராஜனிடம், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்குப் போடப்பட்டுள்ளது. இதில் உள்நோக்கம்இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரிய வேண்டும். மூத்தவழக்கறிஞரான நீங்களே இப்படிச் செய்யலாமா? வேறு யாராவதாக இருந்திருந்தால் அபராதம் விதித்திருப்போம் என்றுநீதிபதிகள் கூறினர்.
இதைக் கேட்ட வழக்கறிஞர் நடராஜன், மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வழக்கை தள்ளுபடிசெய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Click it and Unblock the Notifications
