வன்னியர், தலித் வாக்குகளுக்கு குறி வைக்கும் விஜயகாந்த்!
சென்னை:
தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் மற்றும் தலித் ஓட்டு வங்கியைக் குறி வைத்து காய்நகர்த்த ஆரம்பித்திருக்கிறார் நடிகர் விஜயகாந்த்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜயகாந்த், அடுத்தடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட்டு விட்டது போல தெரிகிறது அவரது நடவடிக்கைகள்.அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி போல மிக அழகாக திட்டமிடுகிறார் விஜயகாந்த் என்கிறார்கள் அவரது நடவடிக்கைகளைகண்காணித்து வரும் அரசியல் பார்வையாளர்கள். அதன் ஒரு பகுதிதான் பண்ருட்டி ராமச்சந்திரன், விஜயகாந்த் கட்சியில் சேர்ந்ததுஎன்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
தமிழகத்தைப் பொருத்தவரை விஜயகாந்த்துக்கு அனைத்துப் பகுதியிலும் பரவலாக ரசிகர் கூட்டம் உள்ளது. இதுதவிரஎம்.ஜி.ஆர். பெயரை வேறு அவர் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதால், எம்.ஜி.ஆரின் ஆரம்பகால ரசிகர்களும், கிராமத்துப்பெண்களுக்கும் தனக்கு ஆதரவாக இருப்பார்கள் என கணிக்கிறார் விஜயகாந்த்.
இதுதவிர தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் சிலவற்றில் அதிருப்தியாக உள்ள தலைவர்களை தனது கட்சியில் சேர்ப்பதன் மூலம்அந்தக் கட்சிகளை பலமிழக்கச் செய்ய முடியும் என்றும் அவர் திட்டமிடுகிறார்.
இதற்கு முதல் கட்டமாகத்தான் பண்ருட்டி ராமச்சந்திரனை தனது கட்சியில் அவர் சேர்த்துள்ளார். விஜயகாந்த் அரசியலில் குதிப்பதுஎன்ற முடிவெடுத்தவுடனேயே எம்.ஜி.ஆருடன் மிக நெருக்கமாக இருந்த சில தலைவர்களை அவர் ரகசியமாக சந்தித்துஆலோசித்துள்ளார். அவர்களில் ஒருவர்தான் பண்ருட்டி ராமச்சந்திரன். இதுதவிர முன்னாள் அமைச்சர்கள் ராஜாராம்,கே.ஏ.கிருஷ்ணசாமி உள்ளிட்டோரையும் அவர் சந்தித்து ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர்கள் மூலம் கிடைத்த நம்பிக்கையைத் தொடர்ந்தே முழு வீச்சில் அவர் அரசியலில் குதித்துள்ளார். தற்போது அவர் ஓட்டுவங்கியை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். முதலில் அவர் குறி வைப்பது வட தமிழகத்தைத்தான்.
காரணம், இங்குதான் அவரது முக்கிய அரசியல் எதிர்ப்பாளர்களான டாக்டர் ராமதாஸும், திருமாவளவனும் கோலோச்சிவருகின்றனர். ராமதாஸின் முக்கிய வாக்கு வங்கி வன்னியர்கள்தான். அதேபோல வட தமிழக தலித் மக்களின் வாக்கு வங்கியில்திருமாவளவனுக்கு பெரும் பங்கு உண்டு.
இந்த இரு வாக்கு வங்கிகளையும் தகர்த்து அதில் ஓட்டையை ஏற்படுத்தினால் தனக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கவாய்ப்புள்ளதாக விஜயகாந்த் கணக்குப் போடுகிறார். அதற்காகத்தான் வன்னிய சமுதாயத்தினர் மத்தியில் நல்ல பெயரும்,ஓரளவுக்கு செல்வாக்குப் படைத்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை கட்சிக்குள் இழுத்துள்ளார்.
பாமகவில் சேரும் வரை ஜாதி சாயம் பூசப்படாத தலைவராகத்தான் பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்தார். ஆனால் ராமதாஸின்தொடர் வற்புறுத்தல் காரணமாக அவர் அக்கட்சியில் இணைந்தார். ஆனால் ஜாதியை முன்னிலைப்படுத்தி ராமதாஸ் தீவிரஅரசியலில் இறங்கியது அவருக்குப் பிடிக்காத காரணத்தால் அக்கட்சியிலிருந்து விலகினார்.
வட மாவட்டங்களில் உள்ள வன்னியர்களிடம், தான் வன்னியர்களுக்கு எதிரானவன் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில்பண்ருட்டியாரை தனது பக்கம் வைத்துக் கொண்டுள்ளார் விஜயகாந்த். இதன் மூலம் வன்னிய எதிர்ப்பாளன் என்ற பிரசாரத்தைமுறியடிக்க முடியும் என்று நம்புகிறார் விஜயகாந்த்.
இதுதவிர இன்னொரு வன்னியர் கட்சியான ஜனநாயக முற்போக்குக் கழகத்துடன் கூட்டணி வைத்துக் கொள்ளவும் விஜயகாந்த்தயாராக உள்ளார். முன்னாள் எம்.பியும், முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பனின் மிக நெருக்கமான நண்பராகவும் விளங்கும்ஜெகத்ரட்சகன்தான் ஜனநாயக முற்போக்குக் கழகத்தின் தலைவர். இவரும் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
இப்படி வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த பலரை தன்னுடன் கூட்டணி வைத்துக் கொண்டால், ராமதாஸின் ஆதிக்கத்தை சற்றேஅசைத்துப் பார்க்க முடியும் என விஜயகாந்த் நம்புகிறார். எனவே அவரது கட்சியில் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த மேலும் பலர்இணைவார்கள் எனக் கூறப்படுகிறது.
இதேபோல, திருமாவளவனுக்கு செக் வைக்கும் வகையில், சில தலித் தலைவர்களையும் தனது கட்சியில் சேர்க்கத்திட்டமிட்டுள்ளார் விஜயகாந்த். அந்தத் தலித் தலைவர்கள் வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும்அவர் தனது கட்சியின் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இப்படிச் செய்வதன் மூலம் வட மாவட்டங்களில் விஜயகாந்த்துக்குப் பெரும் சவாலாக விளங்கும் வன்னியர்கள் மற்றும் தலித்மக்களின் வாக்குகளைப் பிரித்து, அதில் ஒரு பகுதியை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள விஜயகாந்த் திட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications