தேனி மருத்துவக் கல்லூரி: மருத்துவ கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
தேனியில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்த முடிவை விரைவில் அறிவிக்கவேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனியில் ரூ. 85 கோடி மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. 300 படுக்கை வசதி கொண்டமருத்துவமனையும் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக இந்தியமருத்துவக் கவுன்சில் இதுவரை முடிவு எதையும் தெரிவிக்காமல் உள்ளது.இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி டீன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதில், அனைத்து வசதிகளுடன் தேனி மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கீகாரம் வழங்குவதுதொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் எந்த முடிவையும் தெரிவிக்காமல் உள்ளது. எனவே அங்கீகாரம் வழங்குமாறுமருத்துவக் கவுன்சிலுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன், நடப்பு ஆண்டில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது. இருப்பினும் அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு வசதியாக, அங்கீகாரம் கொடுப்பது குறித்தமுடிவை விரைவில் இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications