ஜெயேந்திரர் வழக்கு: கலாமிடம் சு.சுவாமி மனு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சங்கராச்சாரியார் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி ஜனாதிபதி அப்துல் கலாமை நேரில் சந்தித்து ஜனதாகட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி மனு அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று தான் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். இந் நிலையில் அடுத்த மாதம் தீபாவளிவரவுள்ளது.இந் நிலையில் ஜனாதிபதி கலாமை சுப்பிரமணியம் சுவாமி சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில்,
காஞ்சி சங்கராச்சாரியார் மீது போலியாக, ஜோடிக்கப்பட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதனால், இந்த விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும். ஜெயேந்திரர் மீதான வழக்குகளை வாபஸ் பெறும்படி உத்தரவிடவேண்டும். வரும் தீபாவளிக்குள் வழக்குகளைத் திரும்பப் பெறச் செய்ய வேண்டும்.
இல்லையெனில் இந்த விவகாரத்தை சர்வதேசப் பிரச்னையாக்குவதைத் தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு சுவாமி தனது மனுவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications