கைது பயத்தில் கராத்தே: தலைமறைவா?
சென்னை:
சென்னையில் சாலைகளில் முறைகேடாக வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைககளுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும், முறைகேடுஎதிலும் தான் ஈடுபடவில்லை என்றும் துணை மேயர் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
லஞ்சம் வாங்கிக் கொண்டு முறைகேடாக விளம்பர போர்டுகள் வைக்க அனுமதி தந்தது, வெளிநாட்டுப் பொருட்கள் கடத்தல்கும்பல்களுடன் நெருக்கமாக இருப்பது, வருமானத்தை மீறி சொத்து குவித்தது ஆகிய புகார்களின் அடிப்படையில் கராத்தே தியாகராஜன்கைதாகலாம் என்று கூறப்படுகிறது.அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு, அவர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படும் நிலையில், ஒரு மாலை நாளிதழுக்கு அவர்அளித்துள்ள பேட்டியில்,
எந்த ஒரு காவல் நிலையத்திலும் இதுவரை என் மீது எந்த வழக்கும் இல்லை. நாளை என்ன நடக்கும் என்பதை நான் சொல்ல முடியாது.இந்த விவகாரத்தில் நான் தலைமறைவாகவில்லை. திருச்செந்தூர் கோவில் உள்ளிட்ட தலங்களு"கு சென்றுள்ளேன். விரைவில் சென்னைதிரும்பி விடுவேன்.
அதிமுகவைச் சேர்ந்த பல தலைவர்கள் வெளியூர்களுக்குச் செல்கிறார்கள். அவர்களை செல்போனில் கூட சில நேரம் பிடிக்க முடியாது.இதை வைத்து அவர்கள் தலைமறைவாகி விட்டார்கள் எனக் கூற முடியாது. அதேபோல மாநகராட்சி அதிமுக தலைவர் வெற்றிவேல் தனதுகாரிலேயே சீன எல்லை வரை சென்றார். அவரை செல்போனில் கூட பிடிக்க முடியவில்லை. இதை வைத்து அவர் தலைமறைவாகிவிட்டதாக கூற முடியுமா?
விளம்பரப் பலகைகைள் வைப்பது தொடர்பான மாநகராட்சி மன்றக் கூட்டத்தின் தீர்மானங்கள், கோப்புகளை கமிஷ்னர் தான்வைத்திருக்கிறார்.
விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி கொடுப்பதற்கான அதிகாரம் என்னிடம் இல்லை. மன்றக் கூட்டத்தில் தீர்மானங்களைநிறைவேற்றுவதற்கு மட்டுமே எனக்கு அதிகாரம் உள்ளது. மற்ற அதிகாரம் எல்லாம் மாநகராட்சி ஆணையரிடம்தான் உள்ளன.எல்லாவற்றுக்கும் அவர் தான் பொறுப்பு.
கவுன்சிலர்கள் பேசும்போது அவர்களைக் கட்டுப்படுத்தவும், மைக்கை ஆன் செய்ய, ஆப் செய்ய உத்தரவிடவும் மட்டுமே எனக்கு உரிமைஉள்ளது. எனவே மாநகராட்சி தொடர்பான அனைத்துப் பணிகளுக்கும் ஆணையர்தான் பொறுப்பாவார்.
ஆனால், இந்த விளம்பரப் பலகைகள் வைக்கும் அதிகாரம் கூட இப்போது மாவட்ட கலெக்டர் கைக்குப் போய்விட்டது. ஆனால், விவகாரம்நீதிமன்றத்துக்குப் போன பிறகு அந்த அதிகாரத்தை கலெக்டர் கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில் விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி கொடுக்கப்பட்ட விஷயத்தில் என்னை எப்படி குற்றம் சொல்ல முடியும்?. அனுமதிஇல்லாமல் யாராவது விளம்பரப் பலகை வைத்திருந்தால் அதை அகற்ற வேண்டிய பொறுப்பு கலெக்டருடையது. எந்த விளம்பரப்பலகையையும் எடுக்கக் கூடாது என்று யாரையும் எப்போதும் நான் தடுத்ததில்லை.
அதேபோலவே, மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை நான் ஆக்கிரமிப்பு செய்து விற்கவில்லை. இதுவும் பொய்யான புகார் என்றார்கராத்தே.
தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த அதே நேரத்தில் அதிமுகவையும் (அதிமுக தலைவர்கள் பலர் வெளியூர்களுக்கு கோவில்களுக்கு சென்றுவருகிறார்கள். அதற்காக அவர்கள் தலைமறைவாகிவிட்டதாக அர்த்தமா? என்று கேட்டு) தாக்கியுள்ளார் கராத்தே.
இதனால் அவருக்கும் அதிமுக தலைமைக்கும் இடையே பிரச்சனை இருப்பது உறுதியாகியுள்ளது.
மேலும் தன் மீது அதிமுக தலைமை எரிச்சலடைந்து இருப்பதற்கு மாநகராட்சி கமிஷ்னர் விஜய்குமார் தான் காரணம் என்று கராத்தேகருதுவதாகத் தெரிகிறது. அதனால் தான் அவரே எல்லாவற்றுக்கும் பொறுப்பு என்றும் கூறியுள்ளார் கராத்தே.
நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அவரது பேட்டியில் இருந்து, அவர் கைது பயத்தில் இருப்பதும் உறுதியாகிறது.
போயஸ் தோட்டத்துக்கு அதிகார வர்க்கத்துக்கு மிக நெருக்கமாக இருந்த கராத்தே இப்போது அவர்களது எரிச்சலுக்கு உள்ளாகியுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
அடிதடிக்குப் பெயர் போன கராத்தே மீது பல கிரிமினல் குற்றச்சாட்டுகளும் இருந்து வருவது நினைவுகூறத்தக்கது.
துணை மேயர் காரத்தே தியாகராஜன் கைதாகிறார்?












Click it and Unblock the Notifications