• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரசு- போலீஸ் ஆசியுடன் எஸ்ஆர்பி வீட்டில் நடந்த கொள்ளை

By Staff
|

சென்னை:

தனது வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் நகை, பணம் எதையும் எடுக்கவில்லை என்றும், ஆவணங்களைத் திருடவே முயற்சிநடந்துள்ளதாகவும் கூறியுள்ள எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், இந்தக் கொள்ளையில் ஆளும் தரப்பின் கைவரிசை இருப்பதாகசந்தேகம் தெரிவித்துள்ளார்.

SRB
கொள்ளையர்களை நீங்க கண்டுபிடிக்க போறீங்களா?.. போலீசிடம் சிறும் எஸ்ஆர்பி

மேலும் போயஸ் தோட்டத்தின் அதிருப்திக்கு ஆளாகி போலீசாரின் தேடுதல் வேட்டையில் உள்ள சென்னை துணை மேயர்கராத்தே தியாகராஜனுடன் எஸ்.ஆர்.பிக்கும் முடிச்சு போட்டு, அவரையும் கைது செய்ய முயற்சி நடப்பதாகத் தெரிகிறது.

தனது வீட்டுக்குள் ரகசிய கேமரா அல்லது ரகசிய ஒட்டு கேட்பு கருவிகளை வைத்துவிட்டுப் போயிருக்கலாம் என்று எஸ்ஆர்பியேகுற்றம் சாட்டியுள்ளார்.

மூத்த காங்கிரஸ் தலைவரும், சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவருமான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்துக்கு சென்னைகீழ்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் உள்ள டவர் பிளாக்கில் 5வது மாடியில் எஸ்.ஆர்.பிக்கு அரசு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டசபைக் கூட்டம் முடிவடைந்ததையடுத்து எஸ்.ஆர்.பியும் அவரது மனைவி பாலாமணியும் சொந்த ஊரான கோவைக்குப்புறப்பட்டுச் சென்றனர். இந் நிலையில் அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்தது.

மிகுந்த பாதுகாப்பு மிக்க இந்தக் குடியிருப்பில் கொள்ளை நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணிகுறித்து எஸ்ஆர்பி தரப்பு கூறும் தகவல்கள் பகீர் விஷயங்களாக உள்ளன.

முன்பு காங்கிரஸில் இருந்த கராத்தே, எஸ்ஆர்பிக்கு மிகவும் நெருக்கமாக இருந்ததார். முறைகேடுகளுக்குப் பேர் போனகராத்தேவை இப்போது தான் திடீரென ஊழல் விவகாரத்தில் சிக்க வைக்கும் முயற்சியில் போயஸ் தோட்டம் ஈடுபட்டுள்ளது.

இதனால் மீண்டும் காங்கிரசில் ஐக்கியமாகி, தனக்கு அரசியல் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளும் முயற்சியில் கராத்தேஈடுபட்டுள்ளார்.

எஸ்ஆர்பியின் உதவியுடன் காங்கிரசில் கராத்தே இணையலாம் என்று கருதும் போயஸ் கார்டன் இப்போது எஸ்ஆர்பிக்கும் செக்வைக்கும் முயற்சியில் ஈடுட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பின்னணியில் தான் எஸ்ஆர்பியின் வீட்டில் கொள்ளைநடந்துள்ளது.

இதை எஸ்ஆர்பி ஒரு கொள்ளையாகவே கருதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கராத்தே, தன்னிடம் உள்ள முக்கிய ஆவணங்களை எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்திடம் தந்துவிட்டுப் போயிருக்கலாம் என்றுகருதிய போயஸ் தோட்டம் அவரது வீட்டை உடைத்து சோதனையிட ஆட்களை அனுப்பியதாகவே எஸ்ஆர்பி தரப்பு நம்புகிறது.

தன்னை ஏதாவது ஒரு வழக்கில் சிக்க வைக்க முயற்சி நடப்பதாகவும், அதற்காகவே ஆவணங்களைத் தேடி யாரோ வந்துவிட்டுப்போயுள்ளளதாகவும் எஸ்ஆர்பி கூறியுள்ளார்.

எஸ்ஆர்பி கூறுகையில், இந்த வீட்டில் ஏழரை வருடங்களாக குடியிருக்கிறேன். கொள்ளை குறித்து கீழ்பாக்கம் போலீசார் தான்எனக்கு தகவல் தந்தனர். உங்களுக்கு யார் தகவல் தந்தது என்று கீழ்பாக்கம் போலீசாரிடம் கேட்டேன். அதற்கு ஒரு ஐஏஎஸ்அதிகாரி தான் தகவல் சொன்னார் என்றார்கள்.

வீட்டில் நகை, பணம் ஏதும் திருட்டு போகவில்லை. அவை அப்படியே உள்ளன. மிகப் பாதுகாப்பான இந்த இடத்தில் பட்டப்பகலில் இச் சம்பவம் நடந்தது அதிர்ச்சியாக உள்ளது. இங்கிருந்து ஆவணங்களை எடுக்கவே முயற்சி நடந்துள்ளது.

வீட்டுக்குள் நான் என்ன பேசுகிறேன் என்பதை அறிய ரகசிய கேமராவை வைக்க வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். மேலும்ரகசிய ஒட்டு கேட்பு கருவிகளை வைத்துவிட்டுப் போயிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

இந்த விஷயத்தில் ஏதோ சதி உள்ளது. எனக்கு எதிராக காய் நகர்த்தப்படுகிறது. எதற்காக இச் சம்பவம் நடந்தது என்பது போகப்போகத் தெரிந்துவிடும். இந்தச் சம்பவம் மூலம் எனக்கு மறைமுக மிரட்டல் விடுப்பதாக நினைக்கிறேன்.

அரசின் அரவணைப்புடனும் போலீசின் ஆசியுடனும் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து கவர்னரிடம் புகார்தர உள்ளேன் என்றார்.

முன்னதாக இந்தக் கொள்ளை குறித்து விசாரணை நடத்த கீழ்ப்பாக்கம் உதவி கமிஷ்னர் நடராஜன் தலைமையில் போலீஸ் குழுவந்தது. அவர்களிடம் பேசிய எஸ்ஆர்பி, என்னப்பா விசாரணை நடத்த வந்துட்டீங்களா?. இந்த வீட்டுக்குள்ள வந்தது யார் என்றுஉங்களுக்கே தெரியும். சும்மா கண்துடைப்புக்காக விசாரிக்க வந்துட்டீங்க. போங்க.. போய் வழக்கம்போல யாராவதுஅப்பாவிகள் சிலரை பிடித்து கேஸ் போடுங்கள் என்று சீறினார்.

இதையடுத்து எச்சில் விழுங்கியபடி பேசாமல் அமர்ந்திருந்தது போலீஸ் டீம்.

சம்பவம் குறித்து அறிந்தவுடன் எஸ்ஆர்பியை காங்கிரஸ் தலைவர் வாசன் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X