குஷ்புவுக்கு கார்த்திக் ஆதரவு, டி.ஆர் எதிர்ப்பு
சென்னை:
சத்யராஜ் நடிக்கும் சிவலிங்கம் ஐ.பி.எஸ். படத்தில் கார்த்திக் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் தொடக்க விழாவில் கார்த்திக்கலந்து கொண்டார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:வில்லானாக நடிக்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவு இந்த படத்தின் முலம் நிறைவேறி உள்ளது.
நான் நடத்தி வரும் சரணாலயம் அமைப்பை கட்சியாக மாற்றும் எண்ணம் இல்லை.
நடிகை குஷ்பு சொன்ன கருத்து பெரிய பிரச்சினையாக்கப்பட்டுள்ளது. பெண்களை பற்றி ஒரு பத்திரிகை எடுத்த கருத்துகணிப்புக்கு அவர் கருத்து தெரிவித்தார். அவரது கருத்து எனக்கும் உடன்பாடில்லை.
இருந்தாலும் கருத்து வெளியிட்ட பத்திரிகைக்கு எதிராக போராட்டம் நடத்தாமல் குஷ்புவுக்கு எதிராகவும் நடிகர் சங்கம் முன்பும்போராட்டம் நடத்தியது தவறாகும். குஷ்பு மன்னிப்பு கேட்ட பிறகும் இதை பெரிது படுத்துவது நல்லதல்ல என்றார்.
விஜய்காந்துக்கு டி.ஆர் கண்டனம்:
இந்த நிலையில் குஷ்புவை கண்டிக்காததற்காக நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்திற்கு இயக்குனர் விஜய டி.ராஜேந்தர் கண்டனம்தெரிவித்துள்ளார்.
இலட்சிய தி.மு.க. தலைவரான டி.ஆர் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்குபதிலளித்தார்.
கேள்வி- குஷ்பு விவகாரத்தில் விஜயகாந்த் எடுத்த முடிவு பற்றி உங்கள் கருத்து என்ன?
ப- தங்கர் பச்சான் நடிகைகளை பற்றி தரக்குறைவாக பேசியதற்காக அவரை நடிகர் சங்கத்துக்கு வரவழைத்து மன்னிப்பு கேட்கசொன்ன விஜயகாந்தை நடிகன் என்ற முறையில் மதிக்கிறேன்.
ஆனால் தமிழ் பெண்களைப் பற்றி ஒரு வட நாட்டை சேர்ந்த நடிகை குஷ்பு கூறிய கருத்தை அது அவரின் தனிப்பட்ட கருத்துஎன்று கூறி தப்பித்து கொள்ளும் விஜயாந்தை பார்த்து தமிழன் என்ற முறையில் கொதிக்கிறேன்.
தமிழ் பண்பாட்டை பற்றி குஷ்பு தவறாக பேசியதற்கு விஜயகாந்த் வாய் மூடி இருப்பதேன்?. இதற்கு எதிர்த்து குரல் கொடுக்கமுடியாதவர் எப்படி தலைவர் ஆகமுடியும்? குஷ்புவின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.
குஷ்பு மீது 22 வழக்குகள்:
இதற்கிடையே குஷ்பு மீது இதுவரை பல்வேறு நீதிமன்றங்களில் மொத்தம் 22 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நேற்றுமட்டும் அவர் மீது 7 வழக்குகள் பதிவாகியுள்ளன.
பெண்களுக்கு அவதூறு விளைவித்தல், பொது அமைதிக்கு பிரச்சனை ஏற்படுத்துதல் உள்பட பல பிரிவுகளில் இந்த வழக்குகள்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் எழும்பூர், திண்டிவணம் நீதிமன்றங்களில் வழக்குகள் நாளை விசாரணைக்கு வருகின்றன.
குஷ்புவுக்கு டெல்லி கணேஷ் கண்டனம்
தமிழ் பெண்களின் கற்பு பற்றி குஷ்பு தவறாக பேசியிருக்க கூடாது என்று டெல்லி கணேஷ் கூறியுள்ளார்.
மன்னார்குடியில் நிருபர்களிடம் பேசிய டெல்லி கணேஷ் சினிமாவில் வரும் ஆபாச காட்சிகளை, தொப்புள் கலாச்சாரத்தைஎதிர்த்து யாரும் கொடி பிடிக்க முடியவில்லை. சினிமாவில் புகை பிடிப்பதை தடை செய்வது மிகவும் நல்லது.
குஷ்பு தமிழக பெண்களின் கற்பு பற்றி பேசியது கண்டனத்துக்குரியது. ஆனால் அவர் மன்னிப்பு கேட்ட பிறகு கூட அரசியல்புகுந்து விளையாடுகிறது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications