கராத்தே குடும்பத்துக்கு போலீஸ் பாதுகாப்பு: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
துணை மேயர் கராத்தே தியாகராஜனின் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
தனது உயிருக்கும் குழந்தைகள் உயிருக்கும் ஆபத்து உள்ளதாகவும், தங்களுக்கு போலீஸ் அல்லது மத்திய அரசின் பாதுகாப்புவேண்டும் என்றும் கோரி கராத்தேவின் மனைவி ஜோதி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.தனக்கும் தனது கணவர், குடும்பத்தினருக்கு போலீசார் தொல்லை தருவதற்கும் தடை விதிக்க வேண்டும். முன்பிருந்த அதேபாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும் என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி முருகேசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரன்,
துணை மேயரின் பாதுகாப்பு எக்ஸ் பிரிவில் இருந்து ஒய் பிரிவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் துப்பாக்கி ஏந்திய 3போலீசாருக்குப் பதிலாக அவருக்கு ஒரே ஒரு பாதுகாப்பு அதிகாரி பாதுகாப்பு அளிப்பார்.
கடந்த 29ம் தேதி இந்த அதிகாரி தியாகராஜனுக்கு பாதுகாப்பு வழங்க அவரது வீட்டுக்குப் போன போது, தியாகராஜன்அங்கில்லை. தியாகராஜன் மீது இதுவரை வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்றார்.
இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி, கராத்தேவின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்புவழங்க உத்தரவிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications