ஏர்-சஹாரா விமானங்களில் அடுத்தடுத்து சிக்கல்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் சஹாரா விமானம் ரன்வேயில் இருந்து விலகி ஓடி தரையில் பதிந்தது.
117 பயணிகளுடன் கொல்கத்தாவில் இருந்து வந்த அந்த விமானம் தரையிறங்கியபோது இந்த விபத்து நடந்தது. இதில் யாரும்காயமடையவில்லை.ஆனால், பயந்து போன பயணிகள் அலறிக் கொண்டு அவசர, அவசரமாக விமானத்தை விட்டு இறங்கியபோது ஏற்பட்டநெரிசலில் 2 பேர் காயமடைந்தனர். இச் சம்பவத்தால் மும்பை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
இந் நிலையில் இன்று காலை டெல்லி விமானத்தில் இருந்து கொச்சிக்குப் புறப்பட்ட ஒரு ஏர்-சஹாரா விமானத்தில் நடு வானில்என்ஜின் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் டெலிக்கே திரும்பி வந்தது.
அவசரமாக அந்த விமானம் தரையிறங்கியதால் டெல்லி விமான நிலையம் எமெர்ஜென்சி நிலைக்குக் கொண்டு வரப்பட்டது.பெரும் பரபரப்புக்கிடையே இந்த விமானம் பத்திரமாக தரையிறங்கிவிட்டது.












Click it and Unblock the Notifications