வெளிநாட்டில் வேலை: ரூ. 4 கோடி மோசடி- சிங்கப்பூர் பெண் கைது
சென்னை:
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பட்டதாரிகளைஏமாற்றிய சிங்கப்பூர் பெண் கைது செய்யப்பட்டார்.
சிங்கபூரை சேர்ந்த ராதிகா (வயது 31). கணவனை இழந்த இவர் தனது கணவரின் நண்பரான சைதப்பேட்டையைசேர்ந்த சதீஷ் கண்ணா (வயது 29) என்பவருடன் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்த சதீஷ் சென்னையில் ஒரு போலீஸ் அதிகாரியின் மகளை திருமணம் செய்துஉள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இரண்டு பேரும் சென்னை தியாகாராய நகரில் நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து எஸ்.ஆர்.பி.மேனெஜ்மென்ட் அசோசியேட் என்ற வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர்.
இதன் மூலம் 100க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்களிடம் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்குவேலைக்கு அனுப்புதாக கூறி ரூ. 4 கோடி வரை பணம் பறித்துள்ளனர்.
இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் சென்னை துணை கமிஷ்னர் மாரியப்பன், உதவி கமிஷ்னர்கள்லட்சுமிநாதன், பாலு ஆகியோர் தலைமையிலான படை நட்சத்திர ஓட்டலில் சோதனை நடத்தி அங்கு தங்கியிருந்தராதிகா மற்றும் சதிஷ்கண்ணா ஆகியோரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications