பூகம்பம்: பாகிஸ்தான், காஷ்மீர் மக்களுக்கு திமுக ரூ. 40 லட்சம் நிதியுதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் மக்களுக்கு ரூ.40 லட்சம் நிவாரண நிதியாக திமுகவழங்குகிறது.

இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையாவது:

பாகிஸ்தான், காஷ்மீர் பகுதிகளில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் 20லட்சம் ரூபாயை காசோலையாக பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளோம்.

இந்த நிதி திமுக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒரு நாள் ஊதியம், மற்றும் அவர்களின் தொகுதியுள்ளநண்பர்களின் மூலம் வசூல் செய்யப்பட்டதாகும்.

இது தவிர ரூ.10 லட்சம் காஷ்மீர் மக்கள் நிவாரண நிதியாகவும், ரூ.10 லட்சம் பாகிஸ்தான் மக்கள் நிவாரணநிதியாகவும் திமுக மற்றும் திமுக அறக்கட்டளை சார்பில் முறைப்படி வழங்கிட பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்குஅனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார்.

விஜயகாந்த் ரூ. 5 லட்சம் உதவி:

இதற்கிடையே ஜம்மு காஷ்மீர் மாநில பூகம்ப நிவாரண நிதிக்கு நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகதலைவருமான விஜயகாந்த் ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட பூகம்ப பேரழிவைக்கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். இந்தப் பேரழிவில் தங்களது உயிரையும், உடமைகளையும் இழந்துதவிக்கும் அனைத்து மக்களுக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பேரழிவுக்கு என்னால் இயன்ற ரூ. 5 லட்சம் நிதியுதவியை பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு வழங்குகிறேன்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் மனிதாபிமானத்துடன் அனைத்து மக்களும் உதவ முன்வர வேண்டும். இருநாடுகளுக்கும் இடையே நட்பு பாலம் அமைய உதவ வேண்டும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

ஏற்கனவே கார்கில் போர் நிவாரண நிதி, சுனாமி நிவாரண நிதி, குஜராத் நிவாரண நிதி என ஒவ்வொரு முறையும்வாரி வழங்கியவர் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கட்சி ஆரம்பித்த பின்னர் அவர் வழங்கும்முதல் நிவாரண நிதி இதுவாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+