மதுரை இளைஞரின் செல் குறள்!
மதுரை:
திருக்குறளை தினம் படிப்போரை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்டவர்கள் மத்தியில் வித்தியாசமான இளைஞராகதிகழ்கிறார் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியரான முரளி.
இவரது தினசரி வேலைகளில் ஒன்று செல்போன் மூலம் நண்பர்கள், உறவினர்களுக்கும் திருக்குறளை எஸ்.எம்.எஸ் அனுப்புவது.குறளுடன் அதற்குரிய விளக்கத்தையும் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வருகிறார் முரளி.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, திருக்குறள் நமது தாய் மொழியில் இருந்தாலும் அது உலகப் பொதுமறையாகும். உலகின்எந்தப் பகுதியைச் சேர்ந்தவருக்கும் திருக்குறளில் கூறப்பட்டுள்ள விளக்கங்கள் மிகவும் பொருத்தமானதாகும்.
இந்தப் பெருமையை உணர்ந்த நான் அதை அனைவரும் அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்பதற்காக, தினசரிசெல்போன் மூலம் எனது நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களுக்கு எஸ்.எம்.எஸ். செய்து வருகிறேன்.
இதை அனைவரும் வரவேற்றுள்ளார்கள். ஒருவேளை நான் குறள் அனுப்பாவிட்டால் அவர்களே எனக்குப் போன் செய்துஇன்றைய குறள் என்னவாயிற்று என்று கேட்கும் அளவுக்கு எனது குறள் சேவை உள்ளது.
இது எனக்கு மன நிறைவையும், சந்தோஷத்தையும் கொடுத்துள்ளது. நவீன தொழில்நுட்பத்தை இதுபோல பயன்படுத்துவதுதிருப்தியாக உள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications