கார் வேண்டாம்.. பணம் வேண்டாம்..: பதறி மறுத்த நல்லகண்ணு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முது பெரும் கம்யூனிஸத் தலைவர் நல்லகண்ணுவின் 80வது பிறந்த நாளையொட்டி சென்னையில் மாபெரும் விழாவுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கம்யூனிஸத் தலைவர் நல்லகண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகஇருந்தவர். தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொலிட்பீரோ உறுப்பினராக இருக்கிறார்.

பதவியையும் பவிசையும் விரும்பாத இந்த நூற்றாண்டின் மிக அதிசயமான அரசியல்வாதி அவர்.

அவரிடம் ஒரு காரோ வீடோ கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. பஸ்சிலும், ஆட்டோவிலும் பயணிக்கும் அரசியல்வாதி.

அவரது பிறந்த தினத்தையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களுக்குள்ளேயே நிதி திரட்டி நல்லகண்ணுவுக்கு பணமும்ஒரு காரும் வழங்க முடிவு செய்தனர். இதைக் கேள்விப்பட்டு துடித்துப் போய்விட்டாராம் நல்லகண்ணு.

தனக்கு காரும் வேண்டாம் பணமும் வேண்டாம் என்று கூறிவிட்டவர், தனது பிறந்த நாளை மட்டும் கட்சியின் சார்பில் கொண்டாடஒப்புக் கொண்டிருக்கிறார், அதுவும் ஏகப்பட்ட வேண்டுதல்களுக்குப் பிறகு.

இதையடுத்து நல்லகண்ணுவின் பிறந்த தினத்தை பெரிய விழாவாகக் கொண்டாடுகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. பிறந்த நாள்விழாவுடன், நல்லகண்ணுவின் 60வது ஆண்டு பொது வாழ்க்கையையும் சேர்த்துக் கொண்டாடுகிறார்கள்.

Nallakannuஇதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையல்,

தோழர் நல்லகண்ணுவின் 80வது பிறந்த நாள் மற்றும் 60 ஆண்டு பொதுச் சேவையின் நிறைவு விழா வரும் 18ம் தேதிதேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் கொண்டாடப்படவுள்ளது.

எனது தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், உதவிச் செயலாளர் மகேந்திரன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். விழா மலரைஅகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் வெளியிடுகிறார். அதை ஏ.ஐ.டி.யூ.சி. மாநிலத் தலைவர் ஏ.எம். கோபு பெற்றுக்கொள்கிறார்.

நல்லகண்ணுவைப் பாராட்டி ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான கருணாநிதி, ஜி.கே.வாசன், வைகோ,ராமதாஸ், தேசியச் செயலாளர் ராஜா, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய யூனியன்முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹைதீன் உள்ளிட்டோர் பேசுகிறார்கள்.

புதுவை மாநிலச் செயலாளர் கலைநாதன், கேரள மாநில செயலாளர் வெலியம் பார்கவன், ஆந்திர மாநிலச் செயலாளர் நாராயணா,கர்நாடக மாநிலச் செயலாளர் சித்தண்ண கவுடா பாட்டீல் ஆகியோரும் வாழ்த்திப் பேசுகிறார்கள்.

எளிமையின் சின்னம், நல்லகண்ணு நீடுழி வாழ வாழ்த்துவோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+