ராஜிவ் கொலையாளிகளுக்கு மன்னிப்பு: மத்திய அரசுக்கு கலாம் யோசனை
டெல்லி:
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் கருணை மனுக்களை பரிசீலனைசெய்யுமாறு உள்துறை அமைச்சகத்துக்கு ஜனாதிபதி அப்துல் கலாம் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளான முருகன்பேரறிவாளன், சின்னசாந்தன் ஆகியோர் தங்களுக்கு மன்னிப்பு வழங்க கோரி ஜனாதிபதிக்கு மனு அனுப்பினர்.இந்த மனுக்களை பரிசீலிக்குமாறு மத்திய அரசிடம் கலாம் கோரியுள்ளார்.ராஜீவ்காந்தி 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரகூட்டத்துக்கு வந்த போது மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
மனித வெடிகுண்டாக வந்த தணுவுடன் வந்த சிவராசன், சுபா ஆகியோர் பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
விடுதலைப் புலியான முருகன், அவரது மனைவி நளினி, பேரறிவாளன், சின்னசாந்தன் ஆகியோருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து இவர்கள் அப்பீல் செய்ததில் நளினிக்கு மட்டும் தூக்குதண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
முருகன், பேரறிவாளன், சின்னசாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் கடந்த14 வருடங்களாக இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இதனால் இந்த மூவரும் தொடர்ந்து சிறையில்இருந்து வருகிறார்கள்.
இந் நிலையில் தான் 3 பேரும் தங்களுக்கு மன்னிப்பு வழங்க கோரி ஜனாதிபதிக்கு கருணை மனுஅனுப்பியுள்ளனர்.
இவர்களுடன், நாடு முழுவதும் மொத்தம் 50 தூக்கு தண்டனை கைதிகள் ஜனாதிபதிக்கு கருணை மனுஅனுப்பியுள்ளனர்.
1993ம் ஆண்டு 21 போலீசாரை கொன்ற வழக்கில் தொடர்புடைய வீரப்பன் கூட்டாளிகள் ஞானபிரகாசம்,மாதைய்யா, பிலவேந்தன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் மனீந்தர் பிட்டா மீது வெடிகுண்டு வீசி தாக்கியகாலிஸ்தான் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தேவிந்தர் சிங் புல்லார் ஆகியோரும் தூக்கு தண்டனை ரத்துசெய்யக் கோரி கருணை மனு அளித்துள்ளவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
கருணை மனுக்களை பரிசீலனை செய்த ஜனாதிபதி அப்துல்கலாம் இது தொடர்பாக பல்வேறு யோசனைகளைமத்திய அரசுக்கு தெரிவித்துள்ளார்.
அதில் மரண தண்டனையில் இருந்து ராஜீவ் கொலையாளிகள் முருகன், பேரறிவாளன், சின்னசாந்தன்ஆகியோருக்கு மன்னிப்பு அளிக்கலாம் என்று மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.
இதே போல் மற்ற மரண தண்டனை கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யுமாறும்கூறியுள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளாக உள்துறை அமைச்சகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள கருணை மனுக்களை மறு பரிசீலனைசெய்யுமாறு கடந்த மாதம் உள்துறை அமைச்சகத்துக்கு கலாம் பரிந்துரை செய்தார்.
ஆனால் ஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு இந்த மனுதாரர்கள் தகுதியற்றவர்கள் என்று மத்திய அரசுதெரிவித்துவிட்டது.
இந் நிலையில் அப்துல் கலாம் உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீலுக்கு தற்போது ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கருணை மனுக்கள் அனைத்தும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. மரண தண்டனை கைதிகளைகருணை அடிப்படையில் பரிசீலனை செய்து அவர்கள் வாழ வைப்பதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும்.அவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி ஆன்மீக நெறிமுறைகளை போதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கைதிகளில் ஒருவருக்கு 75 வயதாகி விட்டது. அவர் விடுதலை செய்யப்பட்டால் எந்தவிதமான குற்றச்செயல்களிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே இது போன்ற கைதிகளை சுமையாக கருதாமல் மனிதசொத்தாக பாவித்து நல்வழிப்படுத்த அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
இவர்கள் வாழ்வின் மீதமுள்ள காலத்தை குடும்பத்தினருடன் சேர்ந் வாழ அனுமதிக்க வேண்டும் என்றுகுறிப்பிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications