குமுதத்துக்கு எதிராக போராட்டம்: பாமக எம்பி, எம்எல்ஏக்கள் கைது- விடுவிக்க கருணாநிதி கோரிக்கை
சென்னை:
குமுதம் வார இதழைக் கண்டித்துப் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ள பாமக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களைஉடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
சுனாமி நிவாரண நிதியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வழங்கிய நிதியில் ரூ. 57 கோடியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்அன்புமணி ராமதாஸ் முடக்கி வைத்து விட்டதாக குமுதம் வார இதழில் ஒரு மூத்த பத்திரிக்கையாளரின் கட்டுரைகவெளியாகியிருந்தது.இதையடுத்து குமுதம் வார இதழைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவர்கள் போராட்டத்தில் குதித்தனர், வாரஇதழை எரிக்கவும் செய்தனர்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள குமுதம் வார இதழ் அலுவலகம் முன் மாநில பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்தியஅமைச்சர்கள் ஏ.கே.மூர்த்தி, பொன்னுச்சாமி, எம்.பி. செந்தில் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டோர் கூடி குமுதம் வார இதழைதீவைத்து எரித்துப் போராட்டம் நடத்தினர்.
அனைவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோல வேலூர், திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், திண்டிவனம் என தமிழகத்தின் வட மாவட்டங்கள் பலவற்றிலும்பாமகவினர் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தின்போது பாமகவைச் சேர்ந்த 5 எம்.பிக்கள், 17 எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், வார இதழில் வெளியான அவதூறான தகவலைக் கண்டித்து பாமகவினர் போராட்டம்நடத்தியுள்ளனர்.
இதற்காக அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டனத்துக்குரியதாகும். எனவே சிறையில்அடைக்கப்பட்டுள்ள பாமக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சிப் பிரமுகர்களை உடனடியாக விடுவித்து அமைதியானசூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications