ராஜிவ் கொலையாளிகளுக்கு மன்னிப்பு?: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்
பெங்களூர் - டெல்லி:
ராஜிவ் கொலையாளிகள், வீரப்பன் கூட்டாளிகள் உள்ளிட்ட 50 தூக்கு தண்டனைக் கைதிகளுக்கும் மரண தண்டனையை ரத்துசெய்யுமாறு மத்திய அரசுக்கு ஜனாதிபதி கலாம் செய்துள்ள பரிந்துரை குறித்து நாடாளுமன்றத்தில் பதில் அளிக்கப்படும் எனஉள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறினார்.
தூக்கு தண்டனை பெற்ற கைதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்கி மரண தண்டனையை ரத்து செய்துஅவர்களை புது மனிதர்களாக்க முயலலாம் என மத்திய அரசிடம் கலாம் கூறியுள்ளார்.பல ஆண்டுகளாக பல்வேறு ஜனாதிபதிகளிடம் கொடுக்கப்பட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட தூக்கு தண்டனை பெற்ற கைதிகளின்கருணை மனுக்களை பரிசீலித்த கலாம் இந்த யோசனையை முன் வைத்தார். இது தொடர்பாக சிவராஜ் பாட்டீலுக்கு அவர் கடிதமும்எழுதியிருந்தார்.
இந் நிலையில் பெங்களூர் வந்த பாட்டீல் நிருபர்களிடம் பேசுகையில்,
இது மிக முக்கியமான விஷயமாகும். இது தொடர்பாக விளக்கமாக பத்திரிக்கைகளில் பேச முடியாது. இந்த விஷயத்தில் மத்தியஅரசின் நிலை குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமாக பேசுவேன் என்றார்.
இதற்கிடையே கலாம் பரிந்துரைத்த 50 பேரின் கருணை மனுக்களில் 20 பேரின் மனுக்கள் ஏற்புடையவை அல்ல எனஜனாதிபதிக்கு உள்துறை அமைச்சகம் பதில் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. இதில் ராஜிவ் கொலையாளிகளின் மனுக்களும்அடங்கும் என்று தெரிய வருகிறது.
இந் நிலையில் ராஜிவ் கொலையாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி மரண தண்டனையை ரத்து செய்ய காங்கிரஸ் எதிர்ப்புத்தெரிவித்துள்ளது. அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா நிருபர்களிடம் பேசுகையில்,
தீவிரமான வழக்குகளில் உச்சபட்ச தண்டனை வழங்க சட்டத்தில் இடம் இருக்கிறது. இதில் தலையிட வேண்டியதில்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications