இரவு 10 மணிக்கு மேல் டமால்: 6 மாதம் ஜெயில்
சென்னை:
சென்னை நகரில் தீபாவளியையொட்டி இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடித்தால் 6 மாத சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் எச்சரித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தீபாவளி நெருங்கி வருகிறது. எனவே பட்டாசு விற்பனைசூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் சில வழிமுறைகளை வகுத்துள்ளது.அதன்படி இரவு 10 மணிக்கு மேல் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. மீறி வெடித்தால் 6 மாத சிறைத் தண்டனையும்,அபராதமும் விதிக்கப்படும். அதேபோல மருத்துவமனைகள், கல்வி நிலையங்களுக்கு அருகே பட்டாசுகள்வெடிக்கக் கூடாது.
நடு ரோட்டில் பட்டாசு வெடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. அதிக சப்தத்துடன் பட்டாசு வெடித்தாலும்நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் அதிக அளவில் கூடும் தியாகராய நகர், புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் போலீஸார்ஈடுபட்டுள்ளனர். 14 இடங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 250 காவல் மையங்களும்அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல, மாறு வேடத்திலும் போலீஸார் அதிக அளவில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்நடராஜ்.












Click it and Unblock the Notifications