வெங்காயத்தை உரிக்காமல் கண்ணீர்: ராமதாஸ்
சென்னை:
காய்கறி விலை உயர்வை கண்டித்து சென்னையில் வருகிற 25ம் தேதி பாமக பேரணி-ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:அன்றாடம் வீட்டுக்கு தேவையான காய்கறிகள், பருப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியபண்டங்களின் விலை கிடுகிடு வென உயர்ந்து கொண்டே போகிறது.
வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும். ஆனால் அதிமுக ஆட்சியில் வெங்காயத்தின் விலையைகேட்டாலே தாய்மார்களுக்கு கண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறது.
சில்லறையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 20 ரூபாய். தாக்காளியும் அந்த அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.பீன்ஸ் கிலோ 40 ரூபாய். இப்படி விஷம் போல காய்கறி விலை உயர்ந்து கொண்டேயிருக்கிறது.
நியாய விலை கடைகளில் இயங்கி வந்த காய்கறி விற்பனை பிரிவுகள் மூடப்பட்டு விட்டதால் இப்போதுவெளிமார்க்கெட்டில் அவற்றின் விலை ஏறுமுகமாக உள்ளது.
ஜெயலலிதாவின் இந்த மக்கள் விரோத, தாய்மார்கள் விரோத போக்கை கண்டித்தும், காய்கறி உள்ளிட்டஅனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், நியாய விலைக்கடைகளில்சாராய விற்பனை பிரிவுகளை மூடி மீண்டும் காய்கறி விற்பனை பிரிவுகளை திறக்க வலியுறுத்தியும் பாமக மகளிர்அணியினர் வருகிற 25ம் தேதி (செவ்வாய்கிழமை) சென்னையில் மிகப் பெரிய பெரணியும், ஆர்ப்பாட்டமும்நடத்தவுள்ளனர்.
இது தொடக்கம் தான் சாமானிய மக்களையும், தாய்மார்களையும் காக்க அதிமுக அரசு நடவடிக்கைஎடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் தாய்மார்களின் போராட்டம் வெடிக்கும் என்றுகூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications