மத்திய அமைச்சரவையில் சேரும் மதிமுக?
டெல்லி:
மத்திய மந்திரிசபையில் மதிமுக சேரும் என்று தெரிகிறது. இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் வைகோ டெல்லியில்பேச்சு நடத்தினார்.
பாஜக ஆட்சியில் அமைச்சரவையில் இருந்தது மதிமுக. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர் பதவிகள் வேண்டாம் எனமறுத்துவிட்டார் அக் கட்சியின் தலைவரான வைகோ. ஆனால், கட்சியின் அவைத் தலைவரான எல்.கணேசன் மற்றும் செஞ்சிராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் சேர வேண்டும் என வைகோவை நெருக்கி வருகின்றனர்.இதை வைகோ ஏற்க மறுத்து வந்தார். இந் நிலையில் மத்தியில் அமைச்சரவையை மாற்றி அமைக்க பிரதமர் மன்மோகன் சிங்திட்டமிட்டுள்ளார். மதிமுகவை அமைச்சரவையில் சேருமாறு பிரதமர் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனால் இம்முறை அமைச்சரவை மாற்றத்தின்போது மதிமுகவுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்க காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் பிரதமரும் விரும்புகின்றனர்.
இது குறித்து வைகோவுடன் நேற்று பிரதமர் ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சரவையில் சேருமாறு வைகோவிடம்பிரதமர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
இதையடுத்து வைகோவின் நிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எல்.கணேசனுக்கு கேபிடனர் அமைச்சர்பதவியும் இன்னொருவருக்கு இணையமைச்சர் பதவியும் பெற வைகோ முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த முறை அமைச்சர்களாக இருந்த செஞ்சி ராமச்சந்திரனுக்கு இம்முறை வாய்ப்பு கிடைக்காது என்று தெரிகிறது.இணையமைச்சர் பதவிக்கு எம்.பி. கிருஷ்ணனின் பெயரை வைகோ பரிந்துரைப்பார் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications