வீராணம் ஏரி உடையும் அபாயம்!!

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரிக்கு காவிரி வெள்ளம் பாய்ந்து வருவதால் ஏரி நிரம்பி வழிகிறது. இதனால் ஏரிக் கரை உடைந்துவிடாமல் தடுக்க ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு வருகின்றன.

காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணை நிரம்பி வழிகிறது. அணையிலிருந்து2.30 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆறு மற்றும் துணை ஆறுகளில் வெள்ளப் பெருக்குஏற்பட்டு ஆயிரக்கணக்கான ஊர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் நீரின் ஒரு பகுதி கொள்ளிடம் ஆற்றின் வழியாக வீராணம் ஏரிக்கு வந்துகொண்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் நீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வருகிறது.

அதிக அளவில் தண்ணீர் வருவதால் வீராணம் ஏரி நிரம்பி வழிகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.5 அடியாகும். தற்போதுஏரியில் 46 அடி நீர் உள்ளது. தொடர்ந்து நீர் வரத்து இருப்பதால் ஏரி நிறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏரி உடைந்து விடாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. ஏரிக்குவரும் நீரை கொள்ளிடம் ஆற்றின் வழியாக திருப்பி விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் ஏரிக் கரைகளில் ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏரிக்கரைகள்பலப்படுத்தப்பட்டு வருகின்றன. வீராணம் ஏரியைச் சுற்றிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குஅப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+