மேட்டூருக்கு நீர் வரத்து குறைந்தது: கொஞ்சம் அமைதியாகிறது காவிரி
மேட்டூர் :
மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்த நீரின் அளவு கணிசமாக குறைந்து தற்போது வினாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டுள்ளது. இதனால் காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கும் ஓரளவு குறைந்துள்ளது.
![]() |
கன மழை மற்றும் கர்நாடக அணைகளிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், மேட்டூர் அணைக்கு வினாடிக்கு2.30 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் வந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து காவிரி ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக காவிரிக்கரையோரத்தில் உள்ள 11 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல்வேறு ஊர்கள், கிராமங்கள் தண்ணீரில்மூழ்கிவிட்டன.
இந் நிலையில் இன்று காலை முதல் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்து விட்டது. தற்போது வினாடிக்கு 1லட்சம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர் இருப்பை அதிகபட்ச அளவான 120 அடியாக வைக்கும் வகையில்அணையிலிருந்து 1.21 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் பாதியாக குறைந்துள்ளதால், காவிரியில் வெள்ளம் தற்போதுமட்டுப்பட்டுள்ளது. தண்ணீர் வரத்தும், வெளியேற்றமும் தொடர்ந்து குறைந்தால் காவிரியில் வரலாறு காணாத அளவுக்குஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு அடியோடு குறையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 11 மாவட்டங்களிலும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாகஇன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னையில் மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகியிருப்பதால் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்.தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடலோரமாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது.













Click it and Unblock the Notifications