பூர்வாஞ்ச்சல் கிராந்தி சங்கம்: குரானா தொடங்குகிறார்
டெல்லி:
பாரதிய ஜனதாவை விட்டு ஓரங்கட்டப்பட்ட மதன் லால் குரானா பூர்வாஞ்ச்சல் கிராந்தி சங்கம் என்ற புதியஅமைப்பை தொடங்கியுள்ளார்.
பாரதிய ஜனதாவை விட்டு ஓரங்கட்டப்பட்ட மதன்லால் குரானா, யஷ்வந்த் சின்கா, சத்ருகன் சின்கா மற்றும் கீர்த்திஆசாத் ஆகியோர் புதிய அமைப்பை தொடங்குகின்றனர்.நாட்டின் கிழக்குப் பகுதி மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் நலனுக்காக தங்கள் அமைப்பு பாடுபடப்போவதாகவும்அறிவித்துள்ளனர்.
இது குறித்து குரானா கூறியதாவது:
நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள பீகார், ஜார்க்கண்ட், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம் மாநிலங்களை சேர்ந்தஏராளமான பேர் டில்லியில் வசிக்கின்றனர். அவர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக பூர்வாஞ்ச்சல்கிராந்தி சங்கம் என்ற பெயருடைய அமைப்பு வரும் 4ம் தேதி டில்லியில் முறைப்படி தொடங்கப்படும்.
இந்த அமைப்பின் டில்லி கிளைக்கு கீர்த்தி ஆசாத் தலைமை தாங்குவார். பாஜகவின் கீழ் இந்த அமைப்பு செயல்படபோவதில்லை.
முன்னாள் பிரதமர் சந்திரசேகர் உள்பட பல பிரமுகர்கள் இந்த அமைப்பில் அங்கம் வகிப்பார்கள் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications