கருணாநிதி நடத்திய ராமதாஸ் பேரன் கல்யாணம்
சென்னை:
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் பேரன் திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
ராமதாஸின் மகள் விஜயலட்சுமி-ராதாகிருஷ்ணன் தம்பதியினரின் மகன் டாக்டர் பிரபுரதன், செய்யாறு பாமக எம்.எல்.ஏ. உலகரட்சகன்-அம்பிகா தம்பதியினரின் மகள் அனிதாவுக்கும் சென்னையை அடுத்த வானகரத்தில் திருமணம் நடந்தது.கருணாநிதி தலைமை தாங்கி இத் திருமணத்தை நடத்தி வைத்தார். பாமக தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகிக்க, மத்திய அமைச்சர்அன்புமணி ராமதாஸ் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கருணாநதி பேசுகையில், வானகரத்தில் என்ன வானத்தில் திருமணத்தில் நடத்தினாலும் கலந்து கொள்ள வேண்டிய அளவுக்குநட்பும், உறவும், தோழமையும் உடையவர்கள் நாங்கள்.
அடுத்த ஆட்சியின்போது, தமிழர் முறைப்படி சுய மரியாதை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு குறைந்தது ரூ. 10,000 உதவித் தொகைவழங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறினார்.
அடுத்த ஆட்சி நம்முடையாக ஆட்சியாக அமையுமானால், தமிழ்த் தாய் இட்ட கட்டளையாக ராமதாஸின் கட்டளையை நிச்சயம்செயல்படுத்துவேன் என்றார் கருணாநிதி.
ராமதாஸ் பேசுகையில், அரசியல் தலைவர்கள் தங்கள் குடும்பத்தை சரிவர கவனிப்பதில்லை என்று கூறுவார்கள். ஆனால் நானும்,கருணாநிதியும் இதில் விதிவிலக்கு. எங்கள் இருவருக்கும் ஏகப்பட்ட பேரன், பேத்திகள் இருக்கிறார்கள்.
என் முதல் பேரன் திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்திய கருணாநிதிக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. ஏழை மக்கள்திருமணம் நடத்த உதவித் தொகை வழங்கியவர் கருணாநிதி.
நமது திருமண நிகழ்ச்சிகளில் தமிழ் தவிர வேற்று மொழி ஓசையே கேட்கக் கூடாது என்றார்.
மணமகன் பிரபுரதன், ரயில்வேத்துறை இணையமைச்சர் வேலுவின் தனிச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications