மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மத்திய அமைச்சரவை அதிரடியாக மாற்றி அமைக்கப்படுகிறது

வருகிற 7ம் தேதி புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள். காங்கிரஸ் கட்சியிலும் மாற்றம் கொண்டு வர சோனியாகாந்தி முடிவு செய்துள்ளார்.

மத்தியில் பதவியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சர்கள் மாற்றி அமைக்கப்படுவார்கள்,புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறி வந்த போதிலும் தள்ளி போய்க் கொண்டே இருந்தது.

இந்த நிலையில் மத்திய அரசில் அமைச்சராக இருந்த சுனில் தத் மறைவால் காலியான இடம் சோரன், ரகுமான்கான்,ஜெகதீஷ் டைட்லர் ஆகியோர் விலகியதால் காலியான இடம், பெட்ரோலியத் துறைக்கு தனி மந்திரி என பலஇலாகாக்கள் காலியாக உள்ளன.

இந்த நிலையில் பாராளுமன்ற விவகார மந்திரி குலாம் நபி ஆசாத் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அந்தபொறுப்பை பிரியரஞ்சன் தாஸ் கூடுதலாக கவனிக்கிறார். எனவே 6 அமைச்சர்கள் பதவிக்கு புதியவர்கள்நியமிக்கப்பட வேண்டும்.

இந்த நிலையில் வருகிற 7ம் தேதி அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று உறுதியாக தெரிகிறது.

முன்னாள் கேரள முதல்வர் ஏ.கே. அந்தோணி அல்லது வயலார் ரவி இருவரில் ஒருவர் மத்திய அமைச்சர்ஆக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. இதே போல் ஒரிசா முன்னாள் முதல்வர் கிரிதர் கமாங், அல்லது சந்திரசேகர் சாகு ஆகிய இருவரில் ஒருவர் அமைச்சராகலாம் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

சுனில் தத்துக்கு பதிலாக மும்பையைச் சேர்ந்த குருதாஸ் கமாத் அமைச்சர் ஆகிறார். இது தவிர காஷ்மீரைச் சேர்ந்தலால் சிங், சைபதீன் சோஸ் ஆகியோரில் ஒருவர் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார் என தெரிகிறது.

ஏற்கனவே ராஜினாமா செய்த சோரன் மீண்டும் அமைச்சர் ஆக்கப்பட்டு நிலக்கரித்துறையே அவருக்கு மீண்டும்வழங்கப்படுகிறது.

காங்கிரஸ் தரப்பில் 4 பேர் அமைச்சராக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டை சேர்ந்தஜி.கே.வாசன், அமைச்சராவார் என்று செய்தி வெளியான போதிலும் 7ம் தேதி அமைச்சரவை மாற்றத்தில் அவர்இடம் பெறுவாரா என்பது திட்டவட்டாக தெரியவில்லை.

வருகிற 20ம் தேதி பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியிலும் மாற்றம்ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+