சென்னை மக்களுக்கு ஜெ. தந்த தீபாவளிப் பரிசு
சென்னை:
தீபாவளி முதல் சென்னை நகரில் குழாய்கள் மூலம் தினசரி குடிநீர் விநியோகம் தொடங்கியுள்ளது.
சென்னை நகரில் நிலவும் கடும் குடிநீர்ப் பற்றாக்குறை காரணமாக பல காலமாகவே குழாய்கள் மூலம் தினசரிகுடிநீர் விநியோகம் இல்லாமல் இருந்தது.முன்பு குடிநீர் லாரிகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தது.
தற்போது புதிய வீராணம் திட்டத்தின் மூலம் தினசரி குடிநீர் விநியோகம் நடந்து வருகிறது. இந்த நிலையில்வீடுகளுக்கு குழாய்கள் மூலம் தினசரி குடிநீர் வழங்குவது தீபாவளி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட ஒரு அறிக்கையில், சென்னை நகரில் கடந்த ஜூன் மாதம்பெரும் குடிநீர்ப் பஞ்சம் நிலவியது. நகரையே காலி செய்யும் நிலைக்கு அந்தப் பஞ்சம் சென்றது.
ஆனாலும், புதிய வீராணம் திட்டத்தின் மூலம் சென்னை நகரம் காப்பாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகஅரசு மேற்கொண்ட பல்வேறு திட்டங்கள் மூலம் சென்னை நகரின் குடிநீர்ப் பஞ்சம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை நகரில் குழாய்கள் மூலம் தினசரி குடிநீர் வழங்க உத்தரவிட்டுள்ளேன். தீபாவளி தினம்தல் இந்த முறை அமலுக்கு வரும்.
புதிய வீராணம் திட்டத்தின் மூலம் மட்டுமே தினசரி குடிநீர் வழங்குவது சாத்தியமாகியுள்ளது.
இதன் மூலம் சென்னை நகரின் தலையெழுத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார் ஜெயலலிதா.
அவரது அறிவிப்பின்படி சென்னை மாநகரில் உள்ள குடிநீர் குழாய்களில் குடிநீர் விநியோகம் நேற்று முதல்தொடங்கியது. இனிமேல் தினசரி குடிநீர், குழாய்கள் மூலம் கிடைக்கும் என்பதால் பொதுமக்கள்சந்தோஷமடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications