பர்னாலாவுக்கு பதவி நீட்டிப்பு கிடைக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலாவின் பதவிக்காலம் வருகிற 7ம் தேதியுடன் முடிவடைகிறது. அவருக்கு பதவிநீடிப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

தமிழக ஆளுநராக பர்னாலா இருந்து வருகிறார். அவர் இப்பதவியில் இருப்பது இது 2வது முறையாகும்.

கடந்த முறை திமுக ஆட்சிக்காலத்தில் அவர் ஆளுநராக இருந்தார். அதன் பின்னர் தற்போது 2வதுதடவையாக ஆளுநராக பொறுப்பு வகித்து வருகிறார்.

அவரது பதவிக்காலம் வருகிற 7ம் தேதியுடன் முடிவடைகிறது. இருப்பினும் புதிய ஆளுநர் யார் என்பது குறித்துமத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது.

மேலும், புதிய ஆளுநர் குறித்து மாநில அரசுடன், மத்திய அரசு எந்த ஆலோசனையையும் இதுவரைமேற்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

எனவே பர்னாலாவே மீண்டும் ஆளுநராக நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டுசட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,

அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான பர்னாலா ஆளுநர் பதவியில் நீடிப்பதே நல்லது என காங்கிரஸ் கட்சிகருதுவதால், புதிய ஆளுநரை நியமிக்க மத்திய அரசு விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

பர்னாலா பதவி நீட்டிப்புக்கான உத்தரவு ஓரிரு நாட்களில் வெளியாகக் கூடும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+