காவிரி வெள்ள அபாயம் குறைந்தது
மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து வெகுவாக குறைந்ததால் காவிரியில் வெள்ள அபாயம் குறைந்தது.
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் கன மழை பெய்து வந்ததால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்குமீண்டும் நீர்வரத்து அதிகரித்தது.விநாடிக்கு 75,000 கன அடி நீர் வரை வந்ததால், காவிரியில் வெள்ளப் பெருக்கு அபாயம் ஏற்பட்டது.இதையடுத்து காவிக் கரையோரம் உள்ள 11 மாவட்டங்களில் மீண்டும் பீதி ஏற்பட்டது.
ஸ்ரீரங்கம், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை மாலைக்கு மேல் குறைய ஆரம்பித்தது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 50,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்துஅதே அளவிலான நீரே வெளியேற்றப்படுகிறது.
அணைக்கு வரும் மற்றும் வெளியேற்றப்படும் நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு அபாயம் குறைந்துள்ளது. இதனால் காவிரிக் கரையோரப் பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications