டெங்கு, காலரா பரவுகிறது
சென்னை:
சேலம், தமிழகத்தின் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் மற்றும் காலரா பரவி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில்பெரும் பீதி நலவுகிறது.
சமீபத்தில் பெய்த மற்றும் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில்நீர் தேங்கிக் கிடக்கிறது.நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கியுள்ளதால் பல்வேறு நோய்கள் பரவத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக டெங்கு மற்றும் வாந்தி, பேதி ஆகியவை பரவத் தொடங்கியுள்ளன. சில இடங்களில் காலராவும்ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் டெங்கு எனப்படும் விஷக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து மாவட்டநிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை என்றாலும் கூட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும்டாக்டர்கள், இந்தக் காய்ச்சல் டெங்கு தான் என தெரிவிப்பதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.
டெங்கு காய்ச்சலுக்கு ஓருருவர் இறந்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதை மாவட்டநிர்வாகம் உறுதிப்படுத்தவில்லை.
டெங்கு பரவி வருவதையடுத்து மாவட்ட நிர்வாகம் விழிப்படைந்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்புநடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
இதற்கிடையே, வட சென்னையின் பல பகுதிகளில் காலரா பரவி வருவதாக கூறப்படுகிறது. புளியந்தோப்பு,வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட சில பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வாந்தி, பேதிகாரணமாக தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 120 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 47 பேர் குழந்தைகள், 29 பேர்பெண்கள் ஆவர். இவர்களில் சிலருக்கு காலரா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரும்பாக்கத்தைச்சேர்ந்த காயத்ரி என்ற 9 வயது சிறுமி காலராவுக்குப் பலியானதாக தகவல்கள் வெளியாயின.
ஆனால் இதை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் மறுத்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ள யாரும் காலராவால் இதுவரை பலியாகவில்லை.
அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே காலரா குறித்துபொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி கிருஷ்ணன் விளக்கியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications