கர்நாடக அணைகள் திறப்பு: பீதியில் 11 மாவட்டங்கள்
மேட்டூர்:
கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து கணிசமான அளவுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டிருப்பதால், மேட்டூர் அணைக்கு அதிக நீர் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் காவிரிக் கரையோரப் பகுதிகளில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்படுமோ என்ற பீதியில் காவிரிக்கரையோரப் பகுதி மக்கள் உள்ளனர்.தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தற்போது கர்நாடகத்தின் காவிரிநீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது.
இதனால் ஏற்கனவே நிரம்பியுள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளிலிருந்து உபரி நீர் அதிக அளவில்திறந்து விடப்பட்டு வருகிறது.
கர்நாடகத்தில் மழை தொடர்ந்து நீடித்தால் இரு அணைகளிலிருந்தும் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படும் நிலைஉள்ளது. மேலும், தமிழகத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.
தற்போது மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 48,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. கர்நாடக அணைகளிலிருந்துஅதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டால் இது அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 1 லட்சம் கன அடிக்கு மேல் நீர்வந்தால் அந்தத் தண்ணீர் அப்படியே திறக்கப்படும்.
அப்படி திறக்கப்பட்டால், காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடும். இதனால் காவிரிக் கரையோரப் பகுதிமக்கள் மீண்டும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். ஏற்கனவே காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 11 மாவட்டங்கள்கடுமையாக பாதிக்கப்பட்டன. திருச்சியும், ஸ்ரீரங்கம் தண்ணீரில் மிதந்தன.
இந்த நிலையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதை எப்படி சமாளிப்பது என காவிரிக் கரையோரப்பகுதி மக்கள் பயத்தில் மூழ்கியுள்ளனர். இருப்பினும் தற்போது மேட்டூர் அணையிலிருந்து குறைந்த அளவிலானதண்ணீரே வெளியேற்றப்பட்டுக் கொண்டிருப்பதால் வெள்ளப்பெருக்கு அபாயம் இல்லை எனபொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரித்தால் அதை சமாளிப்பது குறித்தும்,கொள்ளிடம் ஆற்றங்கரையில் கட்டுக்கடங்காமல் போகும் தண்ணீரை வேறு பகுதிகளுக்குத் திருப்பி விட்டுஸ்ரீரங்கத்திற்கு பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்தும் அதிகாரிகள் தீவிர ஆய்வில் இறங்கியுள்ளனர்.
கொள்ளிடம் ஆற்றங்கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் அது ஸ்ரீரங்கத்தையே மூழ்கடித்து விடும் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications