விஜயகாந்தின் "கிராம வலம்": சின்னம் முழு நிலவு
சென்னை:
![]() |
நடிகர் விஜயகாந்த் வரும் டிசம்பர் 10ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கிராமப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.இந்தப் பயணம் காஞ்சிபுரத்தில் தொடங்குகிறது.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கியுள்ள விஜயகாந்த் வரும் சட்டமன்றத் தேர்தலில்போட்டியிடவுள்ளார்.
இதற்காக அடுத்த மாதம் 10ம் தேதி அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் இருந்து தமது கிராம சுற்றுப் பயணத்தை அவர்தொடங்குகிறார். காஞ்சிபுரத்தில் முதல் கூட்டத்தில் அவர் பேச உள்ளதால், இக்கூட்டத்தை பிரமாண்டமானமுறையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த கூட்டம் முடிந்ததும் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கிராமங்களுக்கு சென்று விஜயகாந்த், கட்சிக் கொடிஏற்றுகிறார்.
அதன் பிறகு தமிழகம் முழுவதும் 3 மாதங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து கட்சியை பலப்படுத்துவாராம். இந்தசுற்றுப்பயணம் கட்சி பிரச்சாரம் மட்டுமில்லாது தேர்தல் பிரச்சாரமாகவும் இருக்கும் என்று விஜயகாந்த்தெரிவித்துள்ளார்.
முழு நிலவு சின்னம்:
இந் நிலையில் தனது கட்சியின் சின்னமாக முழு நிலவு சின்னத்தை வழங்குமாறு தேர்தல் கமிஷனிடம் விஜய்காந்த்விண்ணப்பித்துள்ளார்.
திமுகவின் உதய சூரியனுக்குப் போட்டியாக நிலவைக் கேட்டுள்ளாராம் விஜய்காந்த். தனது கிராம சுற்றுப்பயணத்தைத் தொடங்க காஞ்சியை அவர் தேர்வு செய்ததும் திமுகவுக்குப் போட்டியாகத் தான் என்கிறார்கள்.
சின்னத்துக்கு எதிராக வழக்கு:
இதற்கிடையே விஜயகாந்த் கட்சிக்கு முழு நிலவு சின்னத்தை வழங்கக்கூடாது என்று கோரி அகில இந்திய தமிழ்மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் டாக்டர் வி.ஜி. பாலசந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்செய்துள்ளார்.
அதில், எங்கள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகும். எங்கள் கட்சிக்கு தேர்தல் சின்னமாக முழு நிலவு சின்னத்தைவழங்க வேண்டும் என்று ஏற்கனவே தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பித்துள்ளோம்.
இந் நிலையில் விஜயகாந்த் தனது கட்சியின் தேர்தல் சின்னமாக முழு நிலவு சின்னத்தை கேட்டோம் என்று செய்திவெளியிட்டுள்ளார். ஏற்கனவே நாங்கள் கேட்ட சின்னத்தை அவர் கேட்கிறார். முழு நிலவு சின்னம் எங்களுக்கேஒதுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அந்த வழக்கு நீதிபதி நாகப்பன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி 4 வாரத்திற்குவிசாரணையை ஒத்திவைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications