மதுரை மேயருக்கு நாளை மருத்துவ சோதனை!
மதுரை:
மதுரை பாஜக பெண் கவுன்சிலரை காரில் அழைத்துக் கொண்டு ஜாலியாக ஊர் சுற்றியபோது ஏற்பட்ட விபத்தில்அவர் பலியானது தொடர்பாக மேயர் செ.ராமச்சந்திரனுக்கு நாளை மதுரை மருத்துவமனையில் பரிசோதனைநடத்தப்படவுள்ளது.
மதுரை பெருங்குடி அருகே சமீபத்தில் பாஜக பெண் கவுன்சிலர் பாண்டீஸ்வரி விபத்தில் இறந்தார். அப்போதுகாரை ஓட்டியது திமுக மேயரான செனா.ராமு தான். ஆனால், விபத்து நடந்தவுடன் காரில் இருந்து வெறும்கைலியுடன் தப்பியோடிவிட்டார்.தனக்குப் பதிலாக காரை ஓட்டியதாக கண்ணன் என்ற அப்பாவி டிரைவரை சரணடைய வைத்தார்.
திருமணமான பெண் கவுன்சிலருடனான ராமுவுக்கு இருந்த தொடர்பு குறித்தும் மதுரையே சந்தி சிரித்து வருகிறது.
ஆனால், ஜாமீனில் வெளியில் வந்துவிட்ட ராமு இப்போது தில்லாக சுற்றி வருகிறார். இந் நிலையில் அவர் மீதானவழக்கை இறுக்க போலீஸ் தரப்பு தீவிரமாகியுள்ளது.
விபத்து நடந்தபோது காரை ராமு தான் ஓட்டினார். அவருக்கும் காயம் ஏற்பட்டது. எனவே அவரைப் பரிசோதனைசெய்ய அனுமதிக்க வேண்டும் என மதுரை 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் மனுசெய்யப்பட்டது. ஆனால் அதை எதிர்த்து செ.ராமச்சந்திரன் மனு செய்தார்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ராஜேஷ் கண்ணா,
இவ்வழக்கில் கைதாகிய மேயர் செ.ராமச்சந்திரன், அவருக்காக போலியாக சரணடைந்த டிரைவர் கண்ணன்ஆகியோர் நாளை காலை 10 மணிக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் முன்பு ஆஜராகி தங்களைமருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கண்ணனை போலீசில் சரணடைய வைக்கும் முன், தான் கட்டியிருந்த கைலியை (அதில் ரத்தக்கறை இருந்தது)அவருக்குக் கட்டிவிட்டு காவல் நிலையத்துக்கு அனுப்பினார் இந்த பிராடு மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications