விமானத்தை கடத்த தீவிரவாதிகள் சதி: சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
சென்னை:
விமானத்தைக் கடத்தவோ அல்லது விமான நிலையங்களின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தவோ தீவிரவாதிகள்திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து சென்னை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்களில்பாதுகாப்பும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிவையங்களைத் தீவிரவாதிகள் தாக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து மத்திய உள்துறைஅமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் நேற்றிரவு எச்சரிக்கையை அனுப்பியது.இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய ஊழியர்கள் உள்படஅனைவரையும் கடும் சோதனைக்குப் பின்னரே விமான நிலையங்களுக்குள் போலீசார் அனுமதிக்கின்றனர். அதே போல டெல்லி,மும்பை, ஜம்மூ, ஹைதராபாத், கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களிலும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளுக்குள் நடந்த தொலைபேசி உரையாடலை மத்திய புலனாய்வு அமைப்புகள் ஒட்டு கேட்டபோது இந்த விவரம்தெரியவந்தது. இதையடுத்து விமான நிலையங்களைப் பாதுகாக்கும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின்கமாண்டோக்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications